தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Smoothie : காலையில் ப்ரேக் ஃபாஸ்டே வேண்டாம்! இந்த ஸ்மூத்தி மட்டும் போதும்! குடிச்சு பாருங்க உடலில் ஏற்படும் மாற்றத்தை!

Smoothie : காலையில் ப்ரேக் ஃபாஸ்டே வேண்டாம்! இந்த ஸ்மூத்தி மட்டும் போதும்! குடிச்சு பாருங்க உடலில் ஏற்படும் மாற்றத்தை!

Priyadarshini R HT Tamil
Jul 01, 2024 01:58 PM IST

Smoothie : காலையில் ப்ரேக் ஃபாஸ்டே வேண்டாம்! இந்த ஸ்மூத்தியை மட்டும் குடிச்சு பாருங்க உங்கள் உடலில் பல்வேறு மாற்றங்கள் எற்படும்.

Smoothie : காலையில் ப்ரேக் ஃபாஸ்டே வேண்டாம்! இந்த ஸ்மூத்தி மட்டும் போதும்! குடிச்சு பாருங்க உடலில் ஏற்படும் மாற்றத்தை!
Smoothie : காலையில் ப்ரேக் ஃபாஸ்டே வேண்டாம்! இந்த ஸ்மூத்தி மட்டும் போதும்! குடிச்சு பாருங்க உடலில் ஏற்படும் மாற்றத்தை!

தேவையான பொருட்கள்

மாதுளை – ஒரு கப்

உலர்ந்த திராட்சை – ஒரு கைப்பிடியளவு

ட்ரெண்டிங் செய்திகள்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் மாதுளை, உலர்ந்த திராட்சை, வாழைப்பழம் மற்றும் ஊறவைத்து, தோலுரித்த பாதாமை சேர்த்து நன்றாக அடிக்கவேண்டும்.

பின்னர் அதை வடிகட்டாமல் அப்படியே பருகவேண்டும். சூப்பர் சுவையில் ஸ்மூத்தி தயார்.

இதை தினமும் காலையில் காலை உணவுக்குப்பதிலாக எடுத்துக்கொண்டால் போதும். உங்களுக்கு ப்ரேக் ஃபாஸ்ட்டே தேவைப்படாது. இது ஆரோக்கியமும் நிறைந்தது.

எந்த வாழைப்பழத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் செவ்வாழை அதிக ஆற்றலைத்தரும். பழம் நல்ல கனிந்ததாக இருக்கவேண்டும்.

கருப்பு உலர்ந்த திராட்சைகளைக் கூட எடுத்துக்கொள்ளலாம். அது இன்னும் கூடுதல் நன்மைகளைத்தரும். இந்த ஒரு காலை உணவு உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

செவ்வாழைப்பழத்தின் நன்மைகள்

100 கிராம் செவ்வாழையில் 89 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட் 22.84 கிராம், நார்ச்சத்துக்கள் 2.6 கிராம், புரதம் 1.09 கிராம், கொழுப்பு 0.33 கிராம், பொட்டாசியம் 358 மில்லி கிராம், மெக்னீசியம் 27 மில்லி கிராம், பாஸ்பரஸ் 22 மில்லி கிராம், வைட்டமின் சி 8.7 மில்லி கிராம், கால்சியம் 5 மில்லி கிராம், சோடியம் 1.3 மில்லி கிராம், வைட்டமின் பி9 13.6 மைக்ரோகிராம் உள்ளது.

நீரிழிவு நோய் கட்டுப்படுத்துகிறது.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய ஏற்படாமல் தடுக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.

கண் பராமரிப்புக்கு உதவுகிறது.

அனீமியாவைக் கட்டுப்படுத்துகிறது.

செவ்வாழையில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடை குறைக்க உதவுகிறது.

செவ்வாழையில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியச் சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

செவ்வாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி6, உடல் வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலியை குறைக்கிறது.

மாதுளையின் நன்மைகள்

முத்துக்கள் போன்ற பழங்கள், இனிப்பான சுவை என அனைத்துக்காகவும், அனைவரும் கொண்டாடும் ஒரு பழமாக மாதுளை உள்ளது. இதை நூறாண்டுகளுக்கும் மேலாக மக்கள் கொண்டாடிவருவதற்கு இதன் சுவை மட்டுமல்ல மருத்துவ குணமும் ஒரு காரணமாகிறது.

இதை நாம் பல்வேறு உணவுகளுடனும், அப்படியேவும், சாறாகவும் சாப்பிடுகிறோம். இந்தப்பழத்தில் இயற்கையிலேயே நோய்களை எதிர்த்து போராடும் குணம் உள்ளது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

அலர்ஜிக்கு எதிரானது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கொழுப்பை முறைப்படுத்துகிறது

ஆதிரோசிலோரிசிஸை தடுக்கிறது

புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை

நினைவாற்றலை பெருக்கி, ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

செரிமானத்துக்கு உதவுகிறது

சுவை மிகுந்தது

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இந்தப்பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. இதை நீங்கள் சாலடில் சேர்த்து சாப்பிடலாம். உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு சுவையான பழம். இதுபோல் ஸ்மூத்தி செய்து தினமும் சாப்பிடலாம்.