Benefits of Roses : நேரு மாமாவுக்கு நெருக்கமானது; ரோஜாப் பூக்களில் எத்தனை நன்மைகள் பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Roses : நேரு மாமாவுக்கு நெருக்கமானது; ரோஜாப் பூக்களில் எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Benefits of Roses : நேரு மாமாவுக்கு நெருக்கமானது; ரோஜாப் பூக்களில் எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Oct 01, 2024 10:01 AM IST

Benefits of Roses : நேரு மாமாவுக்கு நெருக்கமானது, ரோஜாப் பூக்களில் எத்தனை நன்மைகள் உள்ளது என்று தெரிந்தால் மகிழ்வுடன் அதை எடுத்துக்கொள்வீர்கள்.

Benefits of Roses : நேரு மாமாவுக்கு நெருக்கமானது; ரோஜாப் பூக்களில் எத்தனை நன்மைகள் பாருங்கள்!
Benefits of Roses : நேரு மாமாவுக்கு நெருக்கமானது; ரோஜாப் பூக்களில் எத்தனை நன்மைகள் பாருங்கள்!

முக்கியத்துவம்

ரோஜாக்கள் மருத்துவ காரணங்களுக்காக முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சரும நோய்கள், கண்கோளாறுகள், மனஅழுத்தம், உறக்கமின்மை, வயிற்றுப்போக்கு, அசிடிட்டி ஆகிய பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. இதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், மனஅழுத்தத்துக்கு எதிரான குணங்கள், பாலியல் இச்சைகளை தூண்டும் குணம், ஆன்டிசெப்டின், பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், துவர்ப்பு, சுத்தம் செய்யக்கூடிய, வலியைப் போக்கக்கூடிய குணங்கள் உள்ளன.

ரோஜாவின் இதழ்கள் மெத்தியோனைன் சல்ஃபாக்ஸைட்களால் ஆனது. டானின்கள் மற்றும் சாப்போனின்கள் அதில் உள்ளது. பூக்கள் கேம்ப்ஃபெரால், குயிர்செடின் மற்றும் சைனைடை உற்பத்தி செய்யக்கூடியவை.

ரோஜாக்களின் நன்மைகள்

அசிடிட்டியைப் போக்குகிறது

உங்கள் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரித்துவிட்டால் அது அசிடிட்டியை ஏற்படுத்துகிறது. எனவே ரோஜாப்பூக்களின் பொடிகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக்கொண்டால், அது உங்கள் வயிற்றில் அசிடிட்டியைக் குறைக்கும். வயிற்றை குளுமையாக்கும் குணங்கள் நிறைந்தது.

வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது

ரோஜாப்பூக்களின் பொடி உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கிறது. இதில் உள்ள உறிஞ்சும் தன்மை அதற்கு காரணமாகிறது.

அதிக மாதவிடாய் உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது

உங்கள் உடலில் பித்தம் அதிகரிக்கும்போது, மாதவிடாய் உதிரப்போக்கு அதிகரிக்கும். ரோஜாப்பூக்கள், அதிகப்படியான மாதவிடாய் உதிரப்போக்கை கட்டுப்படுத்த உதவும். உங்கள் உடலில் பித்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும். இதற்கு பாலியல் இச்சைகளை தூண்டக்கூடிய குணங்கள் காரணமாகின்றன.

சரும நோய்கள்

சருமத்தில் உள்ள வீக்கம், சருமம் சிவத்தல், ரேஷ்கள், போன்றவற்றை நீக்கும் தன்மைகொண்டது. அதற்கு வீக்கத்துக்கு எதிரான மற்றும் ஆன்டி செப்டிக் குணங்கள் உதவுகின்றன.

மனஅழுத்தத்தை குறைக்கிறது, உறக்கத்துக்கு சிகிச்சை

ரோஜாப்பூக்கள் உங்கள் மனதுக்கு புத்துணர்வைத் தருகிறது. இதில் மனஅழுத்தத்துக்கு எதிரான குணங்கள உள்ளது. அது உங்கள் மனநிலையை மாற்றி பயம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது. இதனால் உங்களின் உறக்கம் மேம்படுகிறது.

முகப்பருக்களுக்கு சிகிச்சை

ரோஜா இதழ்கள் சருமத்தில உள்ள எண்ணெய், அழுக்கு ஆகியவற்றை நீக்குகிறது. இது பித்தத்தை குறைக்கிறது. குளுமைத்தன்மை முக்கப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆர்த்ரிட்டிஸை குணப்படுத்துகிறது

ரோஜாப்பூக்கள் ஆர்த்ரிட்டிஸ் நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அது தொடர்பான அறிகுறிகளையும் போக்குகிறது.

உடல் எடை

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது செரிமான மண்டலத்தை சீராக்கி, நச்சுக்களை வெளியேற்றவும், உடல் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது.

கண்களில் உள்ள வலியைப் போக்குகிறது

இதன் குணப்படுத்தும் திறன் கண்களில் உள்ள அழுத்தம் மற்றும் வலியை உடனடியாகப் போக்குகிறது.

இருமலை குணப்படுத்துகிறது

இதன் மருத்துவ குணங்கள் இருமலைப் போக்குகிறது. தொண்டை கரகரப்பு மற்றும் தொற்றுகளை போக்குகிறது.

ரோஜாக்களின் பயன்பாடுகள்

ரோஜா இதழ்கள் அல்சரை குணப்படுத்துகிறது. இளஞ்சூடான பாலில் கலந்து பருகவேண்டும்.

ரோஜா மொட்டுக்களில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் மலச்சிக்கலைப் போக்குகிறது. குடல் வலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

ரோஜா இதழ்களை ஊறவைத்து வாய் கொப்பளித்தால் வாய் மணக்கும்.

சருமத்துக்கு ரோஜாக்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் உதவுகிறது.

ரோஜா பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. அது ஸ்கர்வி நோயை குணப்படுத்துகிறது.

வயிறு எரிச்சல் மற்றும் அசிடிட்டியை ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் போக்குகிறது.

ரோஜா எண்ணெய் அரோமா தெரபிக்கு பயன்படுத்தப்படுகிறது. தூக்கமின்மை மற்றும் ரத்த அழுத்தத்தைப் போக்குகிறது.

ரோஜா பேஸ்டை உடலில் தடவினால் அது வியர்வையைக் கட்டுப்படுத்து, நல்ல நறுமணத்தை தருகிறது.

150 வகை ரோஜாப்பூக்கள் உள்ளன. 2500 வகை ஹைபிரிட் ரோஜாப் பூக்கள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு, உத்ரபிரதேசம், பீகார், கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர், மேற்கு வங்கம், குஜராத், பஞ்சாப், மத்தியபிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவலாக ரோஜாப்பூக்கள் விளைவிக்கப்படுகின்றன.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.