Happy Period Foods : மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்களா? பெண்களே இதோ இத்தனை தீர்வுகள்!-happy period foods are you suffering from menstrual problems ladies here are so many solutions - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Happy Period Foods : மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்களா? பெண்களே இதோ இத்தனை தீர்வுகள்!

Happy Period Foods : மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்களா? பெண்களே இதோ இத்தனை தீர்வுகள்!

Priyadarshini R HT Tamil
Sep 29, 2024 11:03 AM IST

Happy Period Foods : மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்களா? பெண்களே இதோ இத்தனை தீர்வுகள் உள்ளதா? பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

Happy Period Foods : Are you suffering from menstrual problems? Ladies here are so many solutions!
Happy Period Foods : Are you suffering from menstrual problems? Ladies here are so many solutions!

கீரைகள்

கீரைகளில் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. அது உங்களின் தசைகளில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது. இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் உங்கள் உடலில் மாதவிடாயால் குறையும் ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவும்.

பெரிகள்

ஸ்ட்ராபெரிகள், ப்ளூபெரிகள் மற்றும் ராஷ்பெரிகள் ஆகியவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இது வலியின் தீவிரத்தைக் குறைக்கும்.

நட்ஸ் மற்றும் சீட்ஸ்

பாதாம் மற்றும் வால்நட்கள் போன்ற நட்ஸ்கள், குறிப்பாக ஃப்ளாக்ஸ் விதைகள் மற்றும் பரங்கி விதைகள் ஆகியவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. ஒமேகா 3யில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளன. இது உங்கள் மாதவிடாய் வலிகளை போக்கும் தன்மைகொண்டது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியச்சத்துக்கள் உள்ளன. அது உங்கள் வயிறு உப்பிக்கொள்வதை குறைக்கும். உங்கள் தசைகளின் இயக்கத்தையும் தடுக்கும். இதில் உள்ள இயற்கை சர்க்கரை, உங்களுக்கு உடனடி ஆற்றலைத்தரும். உங்கள் உடல் மாதவிடாய் காலங்களில் சோர்வை எதிர்த்து போராட உதவும்.

இஞ்சி

இஞ்சி காலங்காலமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உங்கள் மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது. இஞ்சியில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள். உங்கள் வலிகளையும், அசவுகர்யங்களையும் போக்குகிறது. எனவே மாதவிடாய் காலத்தில் இஞ்சி டீ பருகுவதும் நல்லது.

டார்க் சாக்லேட்கள்

டார்க் சாக்லேட்கள் சுவையாக உங்கள் மாதவிடாய் வலிகளைப்போக்கும் திறன்கொண்டது. இதில் இரும்பு மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை எதிர்த்து போராடும் தன்மைகொண்டது. இதை அளவாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஃபேட்டி ஃபிஷ்

சால்மன், கெளுத்தி மற்றும் மத்தி ஆகிய மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. இது வீக்கம் மற்றும் வலிகளைக் குறைக்கும் தன்மைகொண்டது. உங்கள் உணவில் மீன்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உங்களை மாதவிடாய் வலிகளில் இருந்த மீட்கிறது.

முழு தானியங்கள்

பிரவுன் அரிசி, குயினோவா மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி சத்துக்கள் உங்கள் சோர்வு மற்றும் மனமாற்றங்களை குறைக்க உதவும். மாதவிடாய் வலிகளுக்கு மருந்தாகும்.

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. மஞ்சளை நீங்கள் உண்ணும் உணவுகளில் சேர்க்கும்போது, அது உங்களின் மாதவிடாய் வலிகளைப்போக்குகிறது. இஞ்சி, மஞ்சள், தேன் கலந்த தேநீரை பருகலாம்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.