Actor Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!
Actor Rajinikanth: உங்கள் தலைவர் நலமுடன் இருக்கிறார் என ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று (30/09/24 ) இரவில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணாமாக அப்போல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இதய மருத்துவ பரிசோதனை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராஜினிகாந்திற்கு 73 வயதாகிறது. வரும் அக்டோபர் 10 தேதி ரஜினி நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
லதா ரஜினிகாந்த்
ரஜினி காந்திற்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடல் நிலை தொடர்பான தகவல்கள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.