Nannari Benefits: கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் நன்னாரி! ஆண்மை அதிகரிப்பு முதல் இவை தரும் பலன்கள் இதோ-check out the health benefits of nannari roots which helps to reduce body heat during summer - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nannari Benefits: கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் நன்னாரி! ஆண்மை அதிகரிப்பு முதல் இவை தரும் பலன்கள் இதோ

Nannari Benefits: கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் நன்னாரி! ஆண்மை அதிகரிப்பு முதல் இவை தரும் பலன்கள் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 14, 2024 03:46 PM IST

கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை, உடல் சூட்டை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நன்னாரி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. அதன் பயன்கள் பற்றி பார்க்கலாம்

நன்னாரி வேர்கள்
நன்னாரி வேர்கள்

உடலில் சூட்டை கிளப்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, அதேபோல் உடல் சூட்டை குறைப்பதற்கும் எண்ணெய் குளியல், உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள், குளிர்ச்சியான பானங்கள் பருகுவதன் மூலம் உடல் சூடு காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

தர்பூசணி, கிர்னி போன்ற பழ வகைகளை, வெள்ளரி, சுரைக்காய், வெண்பூசணி போன்ற நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை உடல் சூட்டை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வரிசையில் உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும், உஷ்ணம் ஏற்பட்டால் அதை ஆற்றுப்படுத்தி உடலை குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை கொண்டதாக நன்னாரி வேர்கள் இருக்கின்றன.

நன்னாரி வேர்கள்

நன்னாரி வேர்கள் சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பல பகுதிகளில் வளரும் இந்த வேர்கள் கொடி வகையாக உள்ளது.

நீண்ட இலைகளுடைய கம்பி போன்ற கொடியினமான நன்னாரி வேர் மேற்புரம் கருமை நிறத்துடனும், நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.

அதேசமயம் இதை வாயில் மென்றால் கசப்பு சுவை கூடியதாக அமைந்திருக்கும்

நன்னாரி பானங்கள்

நன்னாரி வேர்களில் சாறு செய்து பருகுவதன் மூலம் உடல் வியர்வை, சிறுநீ்ர் போக்கு ஆகியவை கூடுகிறது. ரத்தத்தை தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டிருக்கும் நன்னாரி, மூட்டு வலி, உடல் சூடு, தோல் சார்ந்த நோய்களுக்கு தீர்வாக பயன்படுகிறது

உடல் உஷ்ணம் குறைக்கும் நன்னாரி

நன்னாரி சாறு காலையிலும், மாலையிலும் பருகுவதன் மூலம் உடல் உஷ்ணமானது குறைந்து சீராகிறது.

ஒற்றை தலைவலி, செரிமான பிரச்னை, நாள்பட்ட வாத நோய், பீத்த நீக்கம், பால்வினை நோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக இருக்கிறது.

நன்னாரி தரும் பலன்கள்

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அதை நன்கு அரைத்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து பருகுவதன் மூலம் நீர் கடுப்பு, வறட்டு இருமல் ஆகியவற்றுக்கு உடனடி தீர்வு பெறலாம். தொடர்ச்சியாக இதை சாப்பிட்டு வந்தால் நரைமுடியும் நீங்கி கருமை பெறும்

அதேபோல் பச்சை நன்னாரி 20 கிராம் எடுத்து அதை நன்கு சிதைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஒரு நாள் முழுவது்ம ஊறவைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி காலை, மாலை என பருகி வந்தால் பீத்தம் நீங்கு, நீரழிவு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும்.

ஆண்மை பெருகுவதற்கு நன்னாரி வேரை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். நன்னாரி வேர்களை வாழை இலையில் வைத்து கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகம், சர்க்கரை கலந்து பருகிவர சிறுநீர் தொடர்பான நோய்கள் விலகும் 

நன்னாரி வேர் பொடியுடன், கற்றாழை சோறு சேர்த்து உண்டால் வயிறு, குடலில் உண்டாகும் நோய்கள் குணமாகும். இவை தவிர விஷ கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.