தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bacterial Vaginosis : பெண்களே பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்களால் அவதியா? இதோ வீட்டிலேயே செய்யும் எளிய தீர்வுகள்!

Bacterial Vaginosis : பெண்களே பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்களால் அவதியா? இதோ வீட்டிலேயே செய்யும் எளிய தீர்வுகள்!

Priyadarshini R HT Tamil
Jun 07, 2024 10:02 AM IST

Bacterial Vaginosis : பெண்களே பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்களால் அவதிப்படுகிறீர்களா? இதோ வீட்டிலேயே செய்யும் எளிய தீர்வுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Bacterial Vaginosis : பெண்களே பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்களால் அவதியா? இதோ வீட்டிலேயே செய்யும் எளிய தீர்வுகள்!
Bacterial Vaginosis : பெண்களே பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்களால் அவதியா? இதோ வீட்டிலேயே செய்யும் எளிய தீர்வுகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்புறுப்பில் மாதவிடாய் வலி முதல் தொற்றுகள் வரை பல்வேறு பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படுவது பொதுவான ஒன்றுதான். பிறப்புறுப்பில் பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படுவது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. 

பெண்கள் செக்ஸ்வல் ரீதியாக செயல்படத் துவங்கும்போது இந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. உங்களுக்கு பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், உங்கள் உறுப்பில் இருந்து சாம்பல் நிற திரவம் வெளியேறும். அதை தடுக்க வீட்டில் இருந்து நீக்ஙள் என்ன செய்யவேண்டும்.

பிறப்புறுப்பில் பாக்டீரியாக்கள் கட்டாயம் இருக்கவேண்டும். அதன்அளவில் மாற்றம் ஏற்படும்போது, பிறப்புறுப்பு பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. இதற்கு வீட்டில் செய்யக்கூடிய எளிய மருத்துவங்கள் பயனளிக்காதபோது உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். ஆனால் அதற்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முயற்சிசெய்யுங்கள்.

பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் என்னவாகும்?

வழக்கமான பாக்டீரியாக்களின் அளவை பாதிக்கும்

பிறப்புறப்பில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். அலை லக்டோபேசிலி என்று அழைக்கப்படும். இது அமிலத்தன்மையை பிறப்புறுப்பில் தக்கவைக்கும். இதனால் உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு குறையும். தொற்று ஏற்பட்டால், லாக்டேபேசிலி அளவு குறையும். கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரிக்கும்.

செக்ஸ்

அதிக நபர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது இந்த பிரச்னை அதிகம் ஏற்படும். ஆனால் இது பாலியல் நோயாகக் குறிப்பிடப்படவில்லையென்றாலும், பிறப்புறுப்பில் பல்வேறு கிருமிகள் வளர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்தும். பாதுகாப்பில்லாத உடலுறவும் இது ஏற்படுவதற்கு காரணமாகிறது.

சுத்தம் செய்தல்

பிறப்புறுப்பை வேதிப்பொருட்கள் பயன்படுத்தி சுத்தம் செய்வதாலும், அதில் உள்ள இயற்கை பாக்டீரியாக்களின் அளவு குறையும். இதுவும், கெட்ட பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும். பிறப்புறுப்பில் அமில அளவை மாற்றும்.

ஹார்மோன் பிரச்னைகள்

மாதவிடாய் காலங்கள் மற்றும் கர்ப்ப காலம், கருத்தடை மாத்திரைகள் பயன்பாட்டல் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளும், பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாக்களின் அளவை பாதிக்கும். இதனாலும் பிறப்புறுப்பில் பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படும்.

அறிகுறிகள்

சாம்பல் நிற திரவம் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறுவது

உடலுறவுக்குப்பின், துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறுவது

அரிப்பு மற்றும் எரிச்சல்

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்

பிறப்புறுப்பு சிவத்தல் மற்றும் வீக்கம்

வீட்டில் கிடைக்கக்கூடிய தீர்வுகள்

ப்ரோபயோடிக்குகள்

ப்ரோபயோடிக்குகள் உங்கள் உடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச்செய்து கெட்ட பாக்டீரியாக்களை அடித்து விரட்டும். பிறப்புறுப்பு தொற்றுநோய்க்கு, ப்ரோபயோடிக்குகள் சிறந்த பலனைத் தரும் என்று ஆய்வுகள் கூறியுள்ளன.

ப்ரோபயோடிக்குகளை மாத்திரைகளாகவோ அல்லது தயிர், சீஸ், கெஃபீர் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

டீ ட்ரி எண்ணெய்

டீ ட்ரி எண்ணெயில், பாக்டீரியா மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள் உள்ளது. பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் குணம் டீ ட்ரி எண்ணெய்க்கு உள்ளது.

டீ ட்ரி எண்ணெயை எடுத்து பஞ்சினால் தொட்டு பிறப்புறுப்பில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.

போரிக் அமிலம்

பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்களை போக்குவதில் சிறந்ததாக கருதப்படுவது போரிக் அமிலம். இதை பிறப்புறுப்பில் தடவுவதன் மூலம் அடிக்கடி ஏற்படும் தொற்றுக்களை தீர்க்க முடியும்.

பூண்டு

பூண்டு, பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்தும். எனவே பூண்டை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஹெட்ரோஜென் பெராக்ஸைட்

ஹெட்ரோஜென் பெராக்ஸைட் திரவத்தை, பிறப்புறுப்பை கழுவ பயன்படுத்தினால், அது துர்நாற்றத்தைப் போக்கி, பிறப்புறுப்பில் அமில அளவை கட்டுக்குள் வைக்கும். இந்த திரவத்தை தண்ணீரில் கலந்து பிறப்புறுப்பை கழுவி சில நிமிடங்கள் அப்படியே விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவலாம்.

இவற்றையெல்லாம் செய்யும்போது கவனம் தேவை. இதுபோல் வீட்டில் செய்யப்படும் தீர்வுகள் நோயை குணப்படுத்தாது. ஆனால் தொற்றை கட்டுக்குள் வைக்க உதவும். எனவே மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும்போது சென்றுவிடுவது மிகவும் அவசியம்.

WhatsApp channel

டாபிக்ஸ்