தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Jack Fruit

முக்கனிகளில் ஒன்றா பலாவின் சத்துகளும் மருத்துவ குணங்களும்

I Jayachandran HT Tamil
Mar 03, 2023 02:29 PM IST

முக்கனிகளில் ஒன்றா பலாவின் சத்துகளும் மருத்துவ குணங்களும் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

பலாப்பழம்
பலாப்பழம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழர்கள் தங்கள் வாழ்வியலில் கனிகளில் உயர்ந்த முக்கனிகளில் பலாவையும் இணைத்து பெருமை சேர்த்தனர்.

அப்படிப்பட்ட பலாப்பழத்தின் சத்துகளையும் பயன்களையும் இங்கு பார்க்கலாம்.

காயாக இருக்கும் போது பலாவை தோலோடு துண்டித்து சமைக்கலாம். இறைச்சிக்கு இணையான சுவையோடு அற்புதாக இருக்கும்.

பலாப் பழத்தின் கொட்டைகளை சுட்டும் அவித்தும் சாப்பிடலாம். பலாக் காய்களை வைத்து குழம்பும், பொரியலும் செய்யலாம். பலாக்கொட்டைகளை வைத்து புளிக்குழம்பு செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

மேலைநாடுகளில் பலாப்பழத்தை வைத்து ஐஸ்கிரீம், ஸமூத்திகள், பீட்சா டாப்பிங் செய்கின்றனர்.

பலா பழத்துக்கு மருத்துவக் குணங்களும் உள்ளன.

உடல் எடை குறைப்பு முதல் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்கும் பலாப் பழம் உதவுகிறது.

பலாப்பழ கொட்டைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. .

பலாப்பழத்தில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ரைபோஃப்ளேவின், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு நிறைந்துள்ளது.

இந்தப் பழத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகளவு உள்ளன

பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இப்பழத்தை சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது.

பலாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைத்து புற்று நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும்.

இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது. பலாப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள் வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயங்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

பலாப்பழத்தில் ரத்தத்தில் சர்க்கரை மேலாண்மைக்கு உதவும் பல பண்புகள் உள்ளன. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானப் பிரச்னையைக் குறைக்கிறது.

கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமான வைட்டமின்கள் ஏ, சி ஆகியவை உள்ளன.

பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்த பலனைத் தருகிறது.

சோடியத்தின் மோசமான விளைவுகளை எதிர்கொள்வதன் மூலமும் ரத்த நாளங்களின் சுவர்களில் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்