Benefits of Fasting : வாரத்தில் இருமுறை விரதம் இருப்பதால் உங்கள் உடலுக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கிறது பாருங்கள்!
Benefits of Fasting : வாரத்தில் இருமுறை விரதம் இருப்பதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
வாரத்தில் இரண்டு நாட்கள் விரதம் இருப்பதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். முதலில் வாரத்தில் இருமுறை ஏன் விரதம் இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். வாரத்தில் இருவேளை விரதம் இருப்பது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆனால் நீங்கள் அதை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் இருமுறை நீங்கள் விரதம் இருப்பதால், உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அதற்கு முதலில் நீங்கள் விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர் வாரத்தில் இருமுறை இருந்தால் என்ன கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். வாரத்தில் இருமுறை விரதம் இருப்பது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
வளர்சிதையை மேம்படுத்துகிறது
விரதம் இருப்பது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவையும் உயர்த்துகிறது. இது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
உடலின் வளர்சிதை அதிகரிக்க மற்றும் கலோரிகள் பற்றாக்குறையை உருவாக்க விரதம் உதவுகிறது. உடல் எடையைக் குறைத்து உடலில் அதிகளவில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது.
மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
பலருக்கு விரதம் இருப்பது மன ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் ரத்தச்சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது.
செல்களை சரிப்படுத்த உதவுகிறது
விரதம் இருக்கும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் வெளியில் இருந்து கிடைக்கப்பெறாமல் அதை உடலின் உள்ளே இருந்தே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் செல்கள் சேதமடைந்தவற்றை நீக்கிவிட்டு, மீண்டும் புதுப்பித்துக்கொள்கிறது. இதனால் நீங்கள் நீண்ட காலம் வாழ முடியும். மேலும் நாள்பட்ட நோய்கள் ஏற்படமால் தடுக்கும். பல ஆபத்துக்களை இது குறைக்கும்.
வீக்கத்தைக் குறைக்கிறது
சில ஆய்வுகள் வீக்கத்தை குறைக்க விரதம் உதவுவதாக கூறுகிறது. மேலும் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இது உங்கள் உடலில் வீக்கத்தால் ஏற்படும் வியாதிகளை குறைக்கிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது
விரதம் இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு குறைகிறது. இதனால் உடலில் உள்ள ட்ரைகிளிசிரைட்கள் சிறப்பான இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. இதனால் உங்கள் இதயம் நன்முறையில் இயங்க விரதம் இருப்பது சிறந்தது.
செரிமான ஆரோக்கியம்
விரதம் இருக்கது செரிமான மண்டலத்துக்கு ஒரு சிறிய இடைவெளியைத்தருகிறது. இது சிறப்பான குடல் ஆரோக்கியம் மற்றும் குடல் நன்முறையில் இயங்க உதவுகிறது.
கொழுப்பு குறைவதை அதிகரிக்கிறது
விரதம் இருப்பது உடல் கொழுப்பை சேர்த்து வைத்துக்கொண்டு அதை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இதனால் உங்கள் உடலில் சேரும் கொழுப்பு குறைக்கப்படுகிறது. அது ஆற்றலாக்கப்படும்போது கூடுதலாக உதவுகிறது.
சரியான விரத முறை
நீங்கள் விரதம் இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள் என்றால், சரியான முறையை பின்பற்றுங்கள். முழுநாள் விரதம், 5 நாட்கள் வழக்கமான சாப்பாடு 2 நாட்கள் விரதம் என்ற முறையைப் பின்பற்றலாம் அல்லது 16/8 என்ற முறையை பயன்படுத்தவேண்டும். 16 மணி நேரம் விரதம் இருக்கவேண்டும். 8 மணி நேரத்துக்குள் என்ன வேண்டுமோ சாப்பிட்டு முடித்துக்கொண்டு, அடுத்த 16 மணி நேர விரதத்தை துவக்கவேண்டும்.
நீர்ச்சத்து
நீங்கள் விரதம் இருந்தாலும் உடல் நீர்ச்சத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். உடல் நீர்ச்சத்தை இழந்தால் அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே பசியைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் அதற்கு உதவும் வகையில், தண்ணீர், மூலிகை தேநீர், கருப்பு காபி, டீ என சர்க்கரை, கீரிம் இல்லாமல் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிகம் தண்ணீர் பருகவேண்டும்.
விரதம் இல்லாதபோது அதிக உணவுகள்
பெரும்பாலான நபர்கள், விரதம் முடிந்த அடுத்த நாள் வெளுத்து கட்டுவார்கள். ஆனால் அதுபோலு செய்யாதீர்கள். அது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்காது. உடலின் நிலையை மாற்றும். இதனால் உங்கள் உடலின் எடை அதிகரிக்கப்படும். விரதம் இருப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மையைப் போக்கிவிடும்.
உடற்பயிற்சி
நீங்கள் விரதம் இருப்பதன் முழுபலன் கிடைக்க வேண்டுமெனில் நீங்கள் விரதத்துடன் உடற்பயிற்சியும் சேர்த்து செய்யவேண்டும். நீங்கள் விரத காலங்களில் கொஞ்சம் சோர்வாகத்தான் உணர்வீர்கள். எனவே உடற்பயிற்சியின் தீவிரத்தை குறைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் மெதுவான பயிற்சிகள் சிலவற்றை செய்யவேண்டும்.
ஊட்டச்சத்துக்கள்
சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுப்பதை உறுதிசெய்யுங்கள். உங்கள் உணவில் உங்களுக்கு போதிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் பல்வேறு வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் கிடைக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். நீங்கள் உணவு உண்ணும் நாட்களில் இதை செய்யலாம்.
தொடர்புடையை செய்திகள்