Vallarai: நியாபக சக்தியை அதிகரிக்கும் சத்தான வல்லாரை கீரையில் இப்படி ஒரு துவையல் செஞ்சு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vallarai: நியாபக சக்தியை அதிகரிக்கும் சத்தான வல்லாரை கீரையில் இப்படி ஒரு துவையல் செஞ்சு பாருங்க!

Vallarai: நியாபக சக்தியை அதிகரிக்கும் சத்தான வல்லாரை கீரையில் இப்படி ஒரு துவையல் செஞ்சு பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 16, 2024 06:00 AM IST

Vallarai: வல்லாரை கீரையை ஒரே மாதிரி பொரியலாக செய்து தருவதற்கு பதிலாக பக்குவமாக வதக்கி அரைத்து துவையல் செய்யலாம். அதன் ருசி அருமையாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டால் ருசி அட்டகாசமாக இருக்கும்.

Vallarai: நியாபக சக்தியை அதிகரிக்கும்  சத்தான வல்லாரை கீரையில் இப்படி ஒரு துவையல் செஞ்சு பாருங்க!
Vallarai: நியாபக சக்தியை அதிகரிக்கும் சத்தான வல்லாரை கீரையில் இப்படி ஒரு துவையல் செஞ்சு பாருங்க!

வல்லாரைக்கீரை துவையல் செய்ய தேவையான பொருட்கள்

வல்லாரைக்கீரை 300 கிராம்,

கடலை பருப்பு - 2 ஸ்பூன்,

உளுந்தம்பருப்பு - 3 ஸ்பூன்,

சின்ன வெங்காயம் - 10,

வரமிளகாய் -7,

பூண்டு - 4, பல்

இஞ்சி - 2 இஞ்ச்,

தக்காளி - 1,

உப்பு தேவையான அளவு ,

கறிவேப்பிலை - 2 கொத்து ,

கொத்த மல்லி - சிறிதளவு,

எண்ணெய் - 3 ஸ்பூன் ,

தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்,

செய்முறை

ஒரு கடாயை நன்றாக சூடாக்கி அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட வேண்டும்.

அதில் இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு, இரண்டு ஸ்பூன் உளுந்து சேர்த்து வறுக்க வேண்டும். பருப்புகள் நன்றாக சிவந்து வர ஆரம்பிக்கும் போது அதில் 7 வர மிளகாயை சேர்க்க வேண்டும். மேலும் 10 சின்ன வெங்காயத்தையும் தோல் நீக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் அதில் இரண்டு இஞ்ச் இஞ்சியையும் 4 பல் பூண்டையும் தோல் நீக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

அதில் ஒரு பழுத்த தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும். தக்காளி பாதி வெந்த உடன் அதில் சுத்தம் செய்து கழுவி வைத்த வல்லாரை கீரையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 5 நிமிடம் வரை கீரை வதங்கிய பின் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லி சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு ஆற விட வேண்டும்

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். அரைக்கும் போதும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அரைத்த துவையலை ஒரு கிண்ணத்திற்கு மாற்றினால் அவ்வளவு தான் ருசியான வல்லாரைக் கீரை துவையல் ரெடி. இந்த துவையலின் ருசியை மேலும் அதிகரிக்க ஒரு தாளிப்பு கரண்டியை சூடாக்கி ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்கலாம். சூடான சாதத்துடன் இந்த துவையலை சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சாப்பிட்டால் அதன் ருசி அருமையாக இருக்கும்.

குறிப்பு : இந்த துவையலை அம்மியில் அரைத்தால் அதன் சுவை அருமையாக இருக்கும். துவையலை கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சட்னியாகவும் பயன்படுத்தலாம். ருசி அருமையாக இருக்கும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.