தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Sesame One Grain A Day Sesame Prevents Many Diseases Like Heart Diseases Arthritis Diabetes

Benefits of Sesame : தினம் ஒரு தானியம்! இதய நோய்கள், ஆர்த்ரிட்டிஸ், நீரிழிவு என பல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் எள்!

Priyadarshini R HT Tamil
Jan 28, 2024 07:00 AM IST

Benefits of Sesame Seeds : எள்ளில் அதிகளவில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இது இதய நோய்கள், ஆர்த்ரிட்டிஸ், நீரிழிவு என பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் நன்மைகளை பெறுதற்கு நீங்கள் தினமும் எள்ளை ஒரு கைப்பிடியளவு சாப்பிட வேண்டும்.

Benefits of Sesame : தினம் ஒரு தானியம்! இதய நோய்கள், ஆர்த்ரிட்டிஸ், நீரிழிவு என பல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் எள்!
Benefits of Sesame : தினம் ஒரு தானியம்! இதய நோய்கள், ஆர்த்ரிட்டிஸ், நீரிழிவு என பல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் எள்!

ட்ரெண்டிங் செய்திகள்

எள்ளின் நன்மைகள்

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

30 கிராம் எள் 3.5 கிராம் நார்ச்சத்தை கொடுக்கிறது. இது 12 சதவீத தினசரி தேவையை பூர்த்தி செய்கிறது. தினமும் எள் சாப்பிடுவது உங்கள் நார்ச்சத்து எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரிக்கிறது. நார்ச்சத்து உங்கள் உடலின் செரிமானத்துக்கு உதவுகிறது. உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. சில புற்றுநோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படாமலும் தடுக்கிறது.

கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசிரைட்களை குறைக்கிறது

தினமும் எள் சாப்பிடுவதால் உடலில் அதிக கொழுப்பு சேர்வதை குறைக்க உதவுகிறது. அதிக கொழுப்பு இதய நோய் ஆபத்துக்காரணிகள். எள்ளில் 15 சதவீதம் சாச்சுரேடட் கொழுப்பு மற்றும் 41 சதவீதம் பாலி அன்சாச்சுரேடட் மற்றும் 39 சதவீதம் மோனோசாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. அதிகளவில் இவற்றை சாப்பிடுவது கொழுப்பை குறைத்து இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தாவர புரதத்தின் ஊட்டச்சத்து கூடம்

30 கிராம் எள்ளில் 5 கிராம் புரதச்சத்து உள்ளது. இதை வறுத்து சாப்பிடும்போது இதன் புரதம் அதிகரிக்கிறது. புரதச்சத்துக்கள் தசை வளர்ச்சி மற்றும் ஹார்மோன்களை முறைப்படுத்தவும் உதவுகிறது. இதில் மெத்தியோனைன் மற்றும் சிஸ்டைன் ஆகியவை அதிகம் உள்ளது. இந்த இரண்டு அமினோஅமிலங்களும் மற்ற எந்ததானியத்திலும் அதிகம் கிடையாது.

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது

எள்ளில் அதிகம் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்ததை குறைக்க உதவுகிறது. கூடுதலாக இதில் உள்ள லிக்னன், வைட்டமின் இ மற்றும் மற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உங்கள் தமனிகளில் பிளேக் வளராமல் தடுத்து ரத்த அழுத்ததை சரியாக பராமரிக்கிறது.

ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது

எலும்பு ஆரோக்கியத்தை ஊக்குவிக்கு எள்ளை ஊறவைத்து, வறுத்து, முளை கட்டி சாப்பிடும்போதுதான் பலன் அதிகம் கிடைக்கிறது. 

வீக்கத்துக்கு எதிராக போராடி, அதை குறைக்கிறது

நாள்பட்ட உடல் பருமன், புற்றுநோய், இதய மற்றும் சிறுநீரக கோளாறுகளில் வீக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள், 18 கிராம் ஃப்ளாக்ஸ் விதைகள் மற்றும் 6 கிராம் எள் மற்றும் பூசணி விதைகளை சாப்பிட மூன்று மாதத்தில் வீக்கம் 51 முதல் 79 சதவீதம் வரை குறைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்தது

ரத்த செல்கள் உற்பத்திக்கு உதவுகிறது

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது

இதில் உள்ள அதிக புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது. இதில் உள்ள ஃபினோரெசினால், ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உதவுகிறது

நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. அதில் சிங்க், காப்பர், செலினியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் இ ஆகியவை உள்ளன.

ஆர்த்ரடிக் மூட்டு வலியை குணப்படுத்துகிறது

இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான தன்மை ஆர்த்ரிட்டிஸ் மூட்டு வலியை குணப்படுத்துகிறது.

தைராய்ட் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

உங்கள் உடலில் தைராய்ட் ஹார்மோன் சுரக்க இதில் உள்ள செலினியம் உதவுகிறது.

பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் உதவுகிறது 

மெனோபாஸ் நேரத்தில் உங்கள் உடலில ஹார்மோன்களை சமப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஃபைட்டோஈஸ்ரோஜென்கள் அதற்கு உதவுகின்றன. மெனோபாஸ் நேரத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்