Skin : தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா சரும பொலிவு முதல் மூளை செயல்பாடு வரை !
Skin : பீட்ரூட்டில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் பி6, மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது, இது பல சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

Skin : தோல் மற்றும் முடியைப் பற்றி கவலைப்படாதவர் யார்? பெரும்பாலான மக்கள் தங்கள் தோல் மற்றும் முடியைப் பற்றி கவலைப்படுகிறார்கள், நல்ல உணவு உட்கொள்வது தோல் மற்றும் முடி பராமரிப்புக்க உதவியாக இருக்கும். முகப்பரு இல்லாத சருமம் மற்றும் வலுவான கூந்தலைப் பெற, பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். பீட்ரூட்டில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் பி6, மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது, இது பல சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. அடர்த்தியான முடி வளரவும் உதவுகிறது. அப்படியானால், பீட்ரூட்டை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டை பல வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பீட்ரூட் சாம்பார், பீட்ரூட் தோசை, பீட்ரூட் இட்லி, பீட்ரூட் பொரியல், சாலட் போன்றவற்றை சுவைக்கலாம். ஆனால், அதிக நன்மைகளுக்கு பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள். காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.
பீட்ரூட் ஜூஸ் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது:
பீட்ரூட் ஜூஸ் எண்ணெய் சருமத்தை நீக்குகிறது. இது முகப்பருவைக் குறைக்கவும் உதவுகிறது. கேரட் அல்லது வெள்ளரிக்காயுடன் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து குடிப்பதால் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும். இது உங்கள் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.