Brain Health: புத்தி கூர்மை, அறிவாற்றல் வளர்ச்சி..! மூளை ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் உணவுகள் எவை?
- பச்சை காய்கறிகள், கொட்டை மற்றும் விதை வகைகளில் மூளைக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்
- பச்சை காய்கறிகள், கொட்டை மற்றும் விதை வகைகளில் மூளைக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்
(1 / 7)
மனித உடலில் முக்கியமான உறுப்பாக இருந்து வரும் மூளை ஆரோக்கியமாகவும், கூர்மையாகவும் இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் சில உணவுகள் தவறாமல் உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூளை ஆரோக்கியமானது மேம்படும்
(2 / 7)
பாதாம்: பாதாமில் ஏராளமான ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுப்படுடன்,. அறிவாற்றலையும் கூர்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மூளைக்கு வலிமை தருவதுடன், நினைவாற்றையும் பெருக்கும் தன்மையை கொண்டுள்ளது
(3 / 7)
முழு தானியங்கள்: மூளைக்கு செய்லபாட்டுக்கு தேவையான பல்வேறு வகையான அடிப்படை ஊட்டச்சத்துகள் முழு தானியங்களில் இடம்பிடித்துள்ளன. எனவே அவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை பேனி காக்கலாம்
(4 / 7)
முட்டை: இதில் இருக்கும் புரதம் மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவுவதுடன், மூளையின் ஆற்றலை அதிகரித்து கூர்மையாக்குகிறது
(5 / 7)
டார்க் சாக்லெட்டுகள்: புத்தி கூர்மையை அதிகரிக்க செய்கிறது. மனஅழுத்தத்தை குறைத்து மனதை அமைதிபடுத்துகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
(6 / 7)
விதைகள்: பல்வேறு வகையான விதைகளில் இருக்கும் சத்துக்கள் மூளைக்கு ஆற்றலை தருகிறது. இதனால் சிந்தித்தல், புரிந்துகொள்ளுதல் திறன் பலப்படுகிறது
மற்ற கேலரிக்கள்