Amla : நெல்லிக்காயில் ஒரு ருசியான முரப்பா.. டக்குன்னு செஞ்சுடலாம்.. டேஸ்ட் சும்மா அள்ளும்.. செரிமானம் முதல் எத்தனை நன்மை-amla gooseberry is a delicious murappa break up digestion - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla : நெல்லிக்காயில் ஒரு ருசியான முரப்பா.. டக்குன்னு செஞ்சுடலாம்.. டேஸ்ட் சும்மா அள்ளும்.. செரிமானம் முதல் எத்தனை நன்மை

Amla : நெல்லிக்காயில் ஒரு ருசியான முரப்பா.. டக்குன்னு செஞ்சுடலாம்.. டேஸ்ட் சும்மா அள்ளும்.. செரிமானம் முதல் எத்தனை நன்மை

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 30, 2024 12:16 PM IST

Amla : விட்டமின் சி நிறைந்துள்ளது. நெல்லிக்காய் பொடி, நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் மிட்டாய், நெல்லிக்காய் துவையல், நெல்லிக்காய் சாதம் என உணவில் பல வடிவங்களில் நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

Amla : நெல்லிக்காயில் ஒரு ருசியான முரப்பா.. டக்குன்னு செஞ்சுடலாம்.. டேஸ்ட் சும்மா அள்ளும்.. செரிமானம் முதல் எத்தனை நன்மை
Amla : நெல்லிக்காயில் ஒரு ருசியான முரப்பா.. டக்குன்னு செஞ்சுடலாம்.. டேஸ்ட் சும்மா அள்ளும்.. செரிமானம் முதல் எத்தனை நன்மை

நெல்லிக்காய் முரப்பா செய்ய தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் -10

நாட்டு சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

ஏலக்காய் - 3

மிளகு தூள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு ஏற்ப

நெல்லிக்காய் முரப்பா செய்முறை

நெல்லிக்காய் முரப்பா செய்ய முதலில் நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். நெல்லிக்காய் சூடு ஆறிய பிறகு அதை சீவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடி கனமான பாத்திரத்தில் சீவி எடுத்த நெல்லிக்காயுடன் 5 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரையை கலந்து 5 நிமிடம் வரை மூடி போட்டு வேக விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட வேண்டும்.

பின்னர் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவி நெல்லிக்காயில் சேர்க்க வேண்டும் ஏலக்காயையும் தட்டி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் மிளகு தூள் மற்றும் கொஞ்சமான உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்ன சிறிது நேரம் மூடி வைத்து இஞ்சியை வேக விட வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு வேறு பாத்திரத்திற்கு மாற்றினால் நெல்லிக்காய் முரப்பா ரெடி.

குறிப்பு : இந்த நெல்லிக்காய் முரப்பாவை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது. நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை வைத்து கொள்ளலம்.

நெல்லிக்காயின் நன்மைகள்

நெல்லிக்காய் உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்கும். சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும். குறிப்பாக நெல்லிக்காய் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் மற்றும் இரத்த சோகை பிரச்சனையை சரி செய்ய உதவும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் புற்று நோய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும். குடல் இயக்கத்தை துரிதப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தப்பிரச்சனை நீங்கும்.

நெல்லிக்காயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் கண்களில் உள்ள ரெட்டினாவை பாதுகாக்கும். இதனால் கண்களில் நீர் வடிவது தடுக்கப்படும்.

நெல்லிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்க பெரிதும் உதவும். மேலும் இதயத்தை பாதுகாக்க உதவும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.