Morning Quotes : உடலை டிடாக்ஸ் செய்ய உதவும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா.. இதயம் முதல் கல்லீரல் வரை!
Morning Quotes : ரத்தத்தில் உள்ள நச்சுகளை அடித்து வெளியேற்றுவதோடு புதிய ரத்தம் உருவாகவும் உதவுகிறது. இதனால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு பீட்ரூட் மிகவும் உதவும் உணவுப் பொருளாகும். பீட்ரூட் கல்லீரல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவும்.
Morning Quotes : உடலில் உள்ள கெட்ட கெழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும் பீட்ரூட்டில் தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து பாருங்கள். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உள்ள உதவும். பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள், நன்மைகள், மற்றும் ஜூஸ் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
பீட் ரூட் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்
பீட்ரூட் -1
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
புதினா இலை - 2
பீட்ரூட் ஜூஸ் செய்முறை
பீட்ரூட் தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய துண்டு இஞ்சியையும் தோல் நீக்கி சுத்தம் செய்து சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடி கட்டி கொள்ள வேண்டும். வடிகட்டிய ஜூஸ் உடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அதில் இரண்டு புதினா இலையையும் சேர்த்து ஜூஸ் கப்பிற்கு மாற்றினால் டிடாக்ஸ் புதினா ஜூஸ் ரெடி.. அதில் விருப்பம் உள்ளவர்கள் நாட்டு சர்க்கரை அல்லது தேன் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ளலாம். இது இனிப்பு சுவையை தருவதோடு பீட்ரூட்டின் பச்சை வாடயையும் நீக்கும். பீட்ரூட் ஏற்கனவே இனிப்பு சுவையில் இருக்கும் என்பதால் விருப்பம் இல்லாதவர்கள் இதை தவிர்த்து விடலாம்.
குறிப்பு: பீட்ருட் ஜூஸ் பிழிந்து எடுத்த பின் அதன் சக்கையை உதடு முகம், உடல் பகுதியில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். இது உடலை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவும். காலப்போக்கில் கருமை நிறத்தை மாற்ற உதவும்.
பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள்
பீட்ரூட்டில் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, நைட்ரிக் ஆக்சைடு, பாஸ்பரஸ், சோடியம், விட்டமின் (ஏ, பி6, சி) ஆகிய சத்துக்கள் உள்ளது. மேலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பீட்ரூட் ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.
ரத்தத்தில் உள்ள நச்சுகளை அடித்து வெளியேற்றுவதோடு புதிய ரத்தம் உருவாகவும் உதவுகிறது. இதனால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு பீட்ரூட் மிகவும் உதவும் உணவுப் பொருளாகும்.
பீட்ரூட் கல்லீரல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவும்.
செரிமானத்தில் பிரச்சனை உள்ளவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்களும் பீட்ரூட் ஜூஸ் பருகுவது நன்மை பயக்கும்.
வாரத்திற்கு இரண்டு முறை பீட்ரூட் ஜூஸ் எடுத்து வந்தால் சருமம் பொலிவு பெரும்.
பீட்ருட் சாற்றில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்டிக் ஆக்சைடாக மாற்றப்படுகிறது. இதனால் இரத்த நாளங்கள் தளர்வு பெறும். இது இதய செயல் பாட்டை பராமரிக்கவும், உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கவும் உதவும். இப்படி பல நன்மைகள் கொண்ட பீட்ரூட்ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்