Benefits of Banana Flower : அம்மாடியோவ்! இத்தனை நன்மைகளா? இந்த வாழைப்பூவால் உங்களுக்கு எத்தனை பயன் பாருங்கள்?-benefits of banana flower ammadiov so many benefits how many benefits do you see with this banana flower - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Banana Flower : அம்மாடியோவ்! இத்தனை நன்மைகளா? இந்த வாழைப்பூவால் உங்களுக்கு எத்தனை பயன் பாருங்கள்?

Benefits of Banana Flower : அம்மாடியோவ்! இத்தனை நன்மைகளா? இந்த வாழைப்பூவால் உங்களுக்கு எத்தனை பயன் பாருங்கள்?

Priyadarshini R HT Tamil
May 11, 2024 11:20 AM IST

Benefits of Banana Flower : வாழைப்பூவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. பல்வேறு உடல் இயக்கங்களுக்கு இந்த சத்துக்கள் தேவை.

Benefits of Banana Flower : அம்மாடியோவ்! இத்தனை நன்மைகளா? இந்த வாழைப்பூவால் உங்களுக்கு எத்தனை பயன் பாருங்கள்?
Benefits of Banana Flower : அம்மாடியோவ்! இத்தனை நன்மைகளா? இந்த வாழைப்பூவால் உங்களுக்கு எத்தனை பயன் பாருங்கள்?

பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை காக்கிறது

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை குறைக்கவும், வயிற்று வலியை போக்கவும் சமைத்த வாழைப்பூ உதவுகிறது. இதை தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். வாழைப்பூக்கள், புரொஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன்கள் உடலில் அதிகரிக்க உதவி, உதிரப்போக்கை குறைக்கிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

வாழைப்பூ ரத்தச்சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பதற்றத்தை குறைத்து, மனநிலையை மாற்றுகிறது

பதற்றத்தை குறைத்து, மனஅழுத்தத்தைப் போக்குகிறது. இதில் உள்ள மெக்னீசியச் சத்துக்கள் நல்ல மனநிலையைக் கொடுக்கிறது.

இதயநோய் மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது

வாழைப்பூவில் ஃபினோலிக் அமிலம், டானின்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை சமப்படுத்துகிறது. ஆக்ஸிடேடிவ் சேதத்தை தடுக்கிறது. இதய நோய் மற்றும் புற்றுநோயை ஆபத்தை குறைக்கிறது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது

பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிப்பதற்கு வாழைப்பூ உதவுகிறது. இது கருப்பை மற்றும் கர்ப்பத்துக்கு பின்னரான உதிரப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.

வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது

வாழைப்பூவில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். இவை செல்களில் அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது.

சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

வாழைப்பூவில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. வலியை ஏற்படுத்தும் சிறுநீரகக் கற்களை கரைக்க இயற்கையான முறையில் உதவுகிறது. சிறுநீரகத்தில் வீக்கம் மற்றும் சிறுநீரக பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கிறது

வாழைப்பூவில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்துக்கள், உடலுக்கு தேவையான இரும்புச்சத்துக்களை வழங்கி, அனீமியாவின் அறிகுறிகளான சோர்வு, மயக்கம், முறையற்ற இதயத்துடிப்பு, வறண்ட சருமம், குளிர்ந்த பாதங்கள் மற்றும் கைகள் ஆகியவற்றை சரிசெய்கிறது. 

எனவே வாழைப்பூவை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவைப் போக்குகிறது.

செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது

வாழைப்பூ, ஆல்கலைன் நிறைந்த உணவு. இது வயிற்றில் உள்ள அமிலங்களை சமப்படுத்துகிறது. செரிமானத்தைப் போக்குகிறது. அல்சர் மற்றும் வலியை குறைக்கிறது. இதைத்தவிர, இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள், வாழைப்பூவை இயற்கை மலமிலக்கியாக்குகின்றன. குடல் இயக்கத்தை முறைப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்குகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

ஒரு கப் வாழைப்பூவில் சில கலோரிகள் உள்ளது. புரதம், அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இது பசியை கட்டுப்படுத்தி, உடலை நீண்ட நேரம் பசியின்றி வைக்கிறது. இது உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் அவசியம்.

ஆண்குறி பிரச்னைகளைக் குணப்படுத்துகிறது

ஆண்குறியில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்குகிறது. இது ஆண்குறி நீளும் பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது

ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. வாழைப்பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி உதிர்வைக் குறைத்து, வளர்ச்சியை அதிகரிக்கிறது. தலைமுடி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. வாழைப்பூவின் சாறு தலைமுடி சீரம், எண்ணெய், கிரீம் மற்றும் மாஸ்குகளில் பயன்படுத்தப்படுகிறது. வாழைப்பூ, தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்த உதவு, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்தை காக்கிறது

வாழைப்பூவில் போதிய அளவு பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகிய சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள கேட்சின் மற்றும் குயிர்செடின் என்ற ஃப்ளேவனாய்ட்கள் எலும்புப்புரை நோயைக் குறைக்க உதவுகிறது.

வாழைப்பூவில் உள்ள சத்துக்கள்

100 கிராம் வாழைப்பூவில், 51 கிலோ சக்தி உள்ளது. புரதம் 1.6 கிராம், கொழுப்பு 0.6 கிராம், கார்போஹைட்ரேட் 9.9 கிராம், நார்ச்சத்துக்கள் 5.7 கிராம், கால்சியம் 56 மில்லி கிராம், பாஸ்பரஸ் 73.3 மில்லி கிராம், இரும்புச்சத்து 56.4 மில்லி கிராம், காப்பர் 13 மில்லி கிராம், பொட்டாசியம் 553.3 மில்லி கிராம், மெக்னீசியம் 48.7 மில்லி கிராம், வைட்டமின் இ 1.07 மில்லி கிராம் ஆகியவை உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.