Makoy Benefits : பழமோ சிறியது; பலனோ பன்மடங்கு! தொற்றுக்களை துரத்தும் இந்த பழத்தின் நன்மை தெரிந்தால் தேடிச்செல்வீர்கள்!
Benefits of Makoy : இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்காக இந்தப்பழம் கொண்டாடப்படுகிறது. இதன் அளவோ சிறியது, ஆனால் பலனோ பன்மடங்கு பெரியது. இந்த சிறிய பழத்தை ஆயுர்வேத மருத்துவம் ஏன் கொண்டாடுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மணத்தக்காளி கீரை செடியில் உள்ள சிறிய பழங்கள் மணத்தக்காளி பழங்கள். இவை பார்க்க சிறியதாக இருந்தாலும் இனிப்பு சுவையில் இருக்கும். இவை ஆயுர்வேத மருத்துவத்திற்கு பயன்படுத்தும் அளவுக்கு நன்மைகளை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதுகுறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
மணத்தக்காளி பழத்தின் நன்மைகள்
நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது எங்கோ வெளியிடங்களில் படர்ந்திருக்கும் மணத்தக்காளி கீரை செடியில் உள்ள கருப்பும், பிரவுனுமான மணத்தக்காளி பழங்களை பறித்திருக்கிறீர்களா? அதை சாப்பிட்டு இருக்கிறீர்களா? அவற்றை ஆங்கிலத்தில் பிளாக் நைட் ஷேட் என்று அழைக்கிறார்கள்.
இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்காக இந்தப்பழம் கொண்டாடப்படுகிறது. இதன் அளவோ சிறியது, ஆனால் பலனோ பன்மடங்கு பெரியது. இந்த சிறிய பழத்தை ஆயுர்வேத மருத்துவம் ஏன் கொண்டாடுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
மணத்தக்காளி பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் எதிர்ப்பாற்றலை பன் மடங்கு பலப்படுத்துகிறது. தொற்று கிருமிகளுக்கு எதிராக போராடுகிறது. வாழ்க்கையை மாற்றும் தொற்றுக்களையும் பறந்தோடச் செய்கிறது.
அழற்சிக்கு எதிரான குணங்கள்
இதில் உள்ள அழற்சிக்கு எதிரான குணங்கள், அழற்சி மற்றும் வீக்கத்தை உடலில் இருந்து அகற்றுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஆர்த்ரடிஸ், சிறுநீரக நோய்கள், குடல் வீக்கம் மற்றும் அழற்சி போன்ற பிரச்னைகள் தீர்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம்
மணத்தக்காளி பழம் கல்லீரல் பிரச்னைகள் கொண்டவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதில் உள்ள ஹெப்டோபுரொடக்டிவ் குணங்கள் உடல் கழிவுநீக்கம் செய்வதற்கு உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
புற்றுநோய்க்கு எதிரான குணம்
இந்தியாவில் புற்றுநோய் குறித்த அச்சம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த மணத்தக்காளி பழத்தில் உள்ள புற்றுநோய்க்கு எதிரான குணங்கள், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. அது டியூமர் உருவாவதையும் தடுக்கிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் மற்றும் ஃபினோலிக் கூறுகள், உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது. செல்களில் ஃப்ரீ ரேடிக்கல்கள் ஏற்படுத்தும் சேதத்தையும் இது தடுக்கிறது.
கண்பார்வையை கூராக்குகிறது
பார்வை குறைபாட்டால் அவதியா? மணத்தக்காளி பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள், உங்கள் கண்பார்வை திறனை அதிகரிக்கிறது. கண் ஆரோக்கியம் மற்றும் வயோதிகத்தால் ஏற்படும் பார்வை இழப்பு ஆகியவற்றை சரிசெய்கிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
சருமம் பளபளப்பாவதற்கு மணத்தக்காளி பழத்தை, அடிக்கடி மென்று சாப்பிடவேண்டும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தை சேதத்தில் இருந்து காக்கிறது. சருமத்தின் பளபளப்பை அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிப்பால் சருமம் இழக்கும் பொலிவை மீட்கிறது.
ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது
ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் இந்தியர்களை அச்சுறுத்தும் உடல் கோளாறுகள். மணத்தக்காளி பழத்தில், உள்ள ஹைப்போகிளைசெமிக் கூறுகள், நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
அதிக கொழுப்புதான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வாசலாக அமைகிறது. இந்த ஆயுர்வேத உணவு, ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தி, ரத்தத்தில் கொழுப்பை குறைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
செரிமான மண்டல ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
ஆரோக்கியமற்ற குடல் மற்றும் போதிய செரிமானமின்மையால்தான் உடலில் பல்வேறு வியாதிகள் ஏற்படுகிறது. மணத்தக்காளி பழங்களில் உள்ள செரிமான என்சைம்கள், மலச்சிக்கலை போக்க உதவுகிறது. செரிமானமின்மை மற்றும் மற்ற வாயுத்தொல்லைகளில் இருந்தும் குணப்படுத்துகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்