Benefits of Coriander Seeds : தைராய்டு முதல் மாதவிடாய் பிரச்னைகள் வரை பெண்களுக்கான அருமருந்து என்ன தெரியுமா?
Benefits of Coriander Seeds : வரமல்லி விதைகள் உங்கள் மனதை இயற்கை முறையில் அமைதிப்படுத்தும். டென்சனை குறைத்து மன அமைதியை அதிகரிக்கிறது. பயம் மற்றும் பதற்றத்தை போக்குகிறது.
வரகொத்தமல்லியில் உள்ள நன்மைகள்
வரமல்லி என்பது இந்திய சமையலறையில் கட்டாயம் இடம்பெறும் ஒன்று. இது இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்துப்படுகிறது. இதை ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஓரிரவு ஊறவைக்கும்போது அதன் சத்துக்கள் அனைத்தும் இறங்கிவிடும்.
தைராய்டை முறைப்படுத்த உதவுகிறது
வரமல்லி தைராய்டு பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. ஓரிரவு ஊறிய வரமல்லி தண்ணீரை முதலில் வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் பருகிவிடவேண்டும். ஹார்மோன் பிரச்னைகளால் தைராய்டு பிரச்னைகள் ஏற்படுகிறது. வாதம் மற்றும் கபம் சமமின்மையால் தைராய்டு பிரச்னைகள் ஏற்படுகிறது. அதை இந்த வரமல்லி சரிசெய்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
இரும்பு, பொட்டாசியம் மற்றும் சில முக்கிய மினரல்களுடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது வரமல்லி. நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் நிறைந்தது. வரமல்லியின் சத்துக்கள் முழுவதும் கிடைக்க வேண்டுமெனில் அதை ஊறவைத்த தண்ணீரை பருகும்போதுதான் கிடைக்கும்.
செரிமானத்தை அதிகரிக்கிறது
வரமல்லி செரிமானத்தை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வரமல்லி விதைகள் வாயுத்தொல்லைகளை நீக்கும். வயிறு உப்புசம் குறையும். குடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது
சில ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரை, வரமல்லி விதைகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் ஹைப்போகிளைசெமிக் உட்பொருட்கள் உள்ளது. இது நீரிழிவு நோய்யை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இதை ஊறவைத்து அதன் தண்ணீரை பருகுவதை வழக்கமாகக்கொள்ள வேண்டும்.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
வரமல்லியில் உள்ள வீக்கத்துக்கு எதிரான வேதிப்பொருட்கள் உள்ளது. உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும் தன்மைகொண்டது வரமல்லி விதைகள். வீக்க கோளாறுகள் உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
வரமல்லியில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் ஃப்ரீ ராடிக்கல்ஸை எதிர்த்து போராடுகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்ததில் இருந்து உடலை காக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியமான வயோதிகத்தை எட்டுகிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடை இழக்க உதவுகிறது
வரமல்லியில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள், உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இந்த தண்ணீரை பருகும்போது வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கிறது. இதனால் தேவையற்ற பொருட்களை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. இந்த வரமல்லி தண்ணீருடன் சேர்த்து சரிவிகித அளவிலான உணவு எடுத்துக்கொள்ளும்போது, உடல் எடை குறைக்க உதவுகிறது.
மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்துகிறது
மாதவிடாய் பிரச்னைகளுடன் தொடர்புடைய கோளாறுகளையும், அசவுகர்யங்களையும் சரிசெய்ய வரமல்லி உதவுகிறது. மாதவிடாய் காலங்களில், வரமல்லி விதைகளை ஊறவைத்த தண்ணீரை பருகும்போது, அது உங்கள் வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கிறது. மாதவிடாய் வயிற்று வலியையும் போக்குகிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
வரமல்லி விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இந்த வரமல்லி விதைகளை வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது, அது சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சரும பளபளப்பை அதிகரிக்கிறது. வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது.
மனதை அமைதிப்படுத்தும்
வரமல்லி விதைகள் உங்கள் மனதை இயற்கை முறையில் அமைதிப்படுத்தும். டென்சனை குறைத்து மன அமைதியை அதிகரிக்கிறது. பயம் மற்றும் பதற்றத்தை போக்குகிறது.
ஒரு கப் வரமல்லி விதைகள் ஊறவைத்த தண்ணீரை பருகும்போது உங்கள் நாள் புத்துணர்ச்சியுடன் துவங்கும். ஓரிரவு ஊறவைத்த தண்ணீரை அடுத்த நாள் காய்ச்சி வடிகட்டி அந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதை இடைவெளிவிட்டு 48 நாட்கள் தொடர்ந்து அவ்வப்போது செய்ய பலன் அதிகம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்