தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bajra-nuts Pancakes : நட்ஸ்-கம்பு பேன் கேக்குகள் – யம்மியான சுவையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Bajra-Nuts Pancakes : நட்ஸ்-கம்பு பேன் கேக்குகள் – யம்மியான சுவையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 26, 2023 01:00 PM IST

Bajra-Nuts Pancakes : சுவையான கம்பு மற்றும் நட்ஸ், விதைகள் நிறைந்த பேன்கேக்குகள் செய்வது எப்படி? குழந்தைகள் விரும்பும் ஆரோக்கியம் நிறைந்த உணவு.

கம்பு-நட்ஸ் பேன் கேக்குகள் செய்வது எப்படி?
கம்பு-நட்ஸ் பேன் கேக்குகள் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்

வால்நட்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

பரங்கி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

சூரியகாந்தி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

ஃப்ளாக்ஸ் விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

கம்பு மாவு – அரை கப்

கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

ஓட்ஸ் – கால் கப்

நாட்டுச்சர்க்கரை – அரை கப்

பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்

செய்முறை

அனைத்து நட்ஸ்கள் மற்றும் விதைகளையும் ஒரு கடாயில் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த அனைத்தும் ஆறியவுடன், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கம்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.

அந்தப்பொடியை எடுத்து, அதனுடன், கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பால், தண்ணீர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா, உப்பு ஆகியவை சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

இதில் வெண்ணிலா எசன்ஸ் வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு சேர்த்துக்கொள்ளலாம். அது முற்றிலும் உங்கள் விருப்பம் சார்ந்தது. சேர்கிறீர்கள் என்றால் அரை ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

தோசை மாவு பதத்துக்கு கரைத்த அனைத்தையும், தோசைக்கல்லில் சேர்த்து குட்டி, குட்டி பேன் கேக்குகளாக வார்த்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அவற்றை தட்டில் வைத்து, தேன் அல்லது மேபிள் சிரபுடன் பரிமாறலாம். உடன் உங்களுக்கு பிடித்த பழங்களையும் சேர்த்து பரிமாற சுவை அள்ளும்.

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய சிறந்த உணவு இது.

அவர்கள் பள்ளியில் இருந்து வந்தவுடன் செய்து கொடுத்தீர்கள் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். சில நாட்களில் காலை உணவாகவும், பள்ளியில் மதிய உணவுக்கும் கொடுத்து அனுப்பலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்