தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Healthy Wheat Laddu Kids Love It Don't Worry If You Have Leftover Chapati

Wheat Laddu: ஹெல்தியான கோதுமை லட்டு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..இனி சப்பாத்தி மிச்சம் இருந்தால் கவலை வேண்டாம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 29, 2024 08:02 AM IST

Wheat Laddu Recipe: உங்கள் வீட்டில் யாருக்கெல்லாம் சப்பாத்தி பிடிக்காது. உடனே இந்த லட்டு செய்து குடுங்க. குழந்தைகள் கூட மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி ஆசையாக சாப்பிடும் சப்பாத்தி லட்டு. வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் அளவாக கொடுப்பது நல்லது.

ஹெல்தியான கோதுமை லட்டு..  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..இனி சப்பாத்தி மிச்சம் இருந்தால் கவலை வேண்டாம்!
ஹெல்தியான கோதுமை லட்டு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..இனி சப்பாத்தி மிச்சம் இருந்தால் கவலை வேண்டாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு

உப்பு

வெல்லம்

ஏலக்காய்

தேங்காய் துருவல்

முந்திரி பருப்பு

உலர் திராட்சை

செய்முறை

கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவை வழக்கம் போல் பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் மாவை குறைந்தது அரை மணி நேரம் மூடி வைத்து பின்னர் வழக்கம் போல் நாம் சப்பாத்தி போட்டு எடுத்து கொள்ள வேண்டும். சப்பாத்தி லேசாக ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து இரண்டு மூன்று பல்ஸ் விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பொடித்து வைத்த வெல்லத்தை மிக்ஸியில் சேர்த்து லேசாக பவுடர் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 3 ஏலக்காயை அளவிற்கு பொடி செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து சேர்த்து பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியில் நெய்யை விட்டு அதில் விருப்பத்திற்கு ஏற்ப முந்திரி, உலர் திராட்சையை லோசாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தேங்காய் துவலையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். ஏற்கனவே அரைத்து வைத்த கலவையில் பிரட்டி எடுக்க வேண்டும். பின்னர் இளஞ்சூடாக இருக்கும் போதே லட்டு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான கோதுமை லட்டு ரெடி.

குறிப்பு: நாம் வீட்டில் செய்த சப்பாத்திகள் மீதம் இருந்தால் கூட அதற்கு ஏற்ப பொருட்களை சேர்ந்து இந்த லட்டுவை செய்து தரலாம். இது குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ் ரெசிபியாக இருக்கும். ஆரோக்கியமானதும் கூட. இதில் விருப்பத்திற்கு ஏற்ப பாதம் பிஸ்தா போன்ற பருப்பு களையும் சேர்த்து கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் அளவாக கொடுப்பது நல்லது.

கோதுமையின் நன்மைகள்

சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு உதவுகிறது

கோதுமையில் செலினியம் உள்ளது. அது உடலுக்கு கேடு விளைவிக்கும் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட். தலைமுடி வறண்டுபோகாமல் தடுக்கிறது. இதில் உள்ள சிங்க் சத்து மற்றும் வைட்டமின் இ தலைமுடியை ஆரோக்கியமாக்குகிறது

செரிமானத்தை மேம்படுத்துகிறது

கோதுமையில் உள்ள நார்ச்சத்து, பல நன்மைகளை உங்கள் உடலுக்கு அளிக்கிறது. அதனால் இது செரிமானத்துக்கு உதவுகிறது. உடலில் இருந்து நச்சுக்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மை, செரிமான மண்டலம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது

நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது, உடல் எடை ஆபத்தை குறைக்கிறது. கோதுமை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. ஒருவர் மூன்று வேளையும் கோதுமை உணவுகளை எடுத்துக்கொண்டால், அவரது உடல் எடை சரியாக பராமரிக்கப்படுகிறது.

ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும் நிறைந்தது

கோதுமையில் வைட்டமின்கள், நார்ச்சத்து, மெக்னீசியம், சிங்க மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்தது. இது வைட்டமின் பி சத்து நிறைந்தது. இதில் நிறைய சிங்க, இரும்பு, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற மினரல்கள் நிறைந்துள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன.

சுத்தப்படுத்துகிறது

ரத்தத்தை சுத்தப்படுத்தி, ஆபத்தான பாக்டீரியாக்களை நீக்குவதால், இது கழிவுநீக்கத்துக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. தலைவலி, மூட்டுவலி மற்றும் வயிறு உப்புசம் போன்றவை நீங்குகிறது. கோதுமை உட்கொள்வதால், மலச்சிக்கல் நீங்குகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, கழிவுகளை நீக்கி, ஆரோக்கியமான வயிறு மற்றும் குடலை கொடுக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்