தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Poha Sweet Pongal : குரோதி புத்தாண்டை வரவேற்க இப்படி ஒரு சர்க்கரை பொங்கல் செய்ங்க! இதோ ரெசிபி!

Poha Sweet Pongal : குரோதி புத்தாண்டை வரவேற்க இப்படி ஒரு சர்க்கரை பொங்கல் செய்ங்க! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Apr 13, 2024 07:00 AM IST

Poha Sweet Pongal : பொதுவாக சர்க்கரைப் பொங்கலை பச்சரிசி மற்றும் வெல்லத்தில் செய்வோம். கொஞ்சம் வித்யாசமாக பாரம்பரிய அரிசி வகைகள் வைத்து செய்யலாம்.

Poha Sweet Pongal : குரோதி புத்தாண்டை வரவேற்க இப்படி ஒரு சர்க்கரை பொங்கல் செய்ங்க! இதோ ரெசிபி!
Poha Sweet Pongal : குரோதி புத்தாண்டை வரவேற்க இப்படி ஒரு சர்க்கரை பொங்கல் செய்ங்க! இதோ ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒவ்வொரு புத்தாண்டுக்கும் புதிதாக என்ன இனிப்பு செய்து வீட்டில் வழிபாடு நடத்த வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். சர்க்கரை பொங்கல் வழக்கமான ஒன்று. ஆனாலும் ஒரே மாதிரி சர்க்கரைப் பொங்கல் அனைவருக்கும் போரிங்கான ஒன்றாக இருக்கும்.

பொதுவாக சர்க்கரைப் பொங்கலை பச்சரிசி மற்றும் வெல்லத்தில் செய்வோம். கொஞ்சம் வித்யாசமாக பாரம்பரிய அரிசி வகைகள் வைத்து செய்யலாம்.

கவுனி முதல் சீரகசம்பா வரை சர்க்கரை பொங்கல் வைப்பதற்கான அரிசிகளும் நன்றாக இருக்கும். இங்கு ஒரு வித்யாசமான சர்க்கரை பொங்கல் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

அது அவல் வைத்து செய்யப்படும் சர்க்கரைப்பொங்கல் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்க்கரைப் பொங்கலை செய்து இந்த குரோதி தமிழ் புத்தாண்டை வரவேற்க தயாராகுங்கள்.

அவல் சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்

கெட்டி அவல் – ஒரு கப்

பாகு வெல்லம் – ஒரு கப்

நெய் – 4 டேபிள் ஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 8

உலர்ந்த திராட்சை – 5

ஏலக்காய்த்தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

கனமான கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்துகொள்ளவேண்டும். முந்திரி நிறம் மாறும்போது கெட்டி அவலையும் சேர்த்து‌ மிதமான சூட்டில் வாசம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவேண்டும்.

கடாயில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும். தண்ணீர் கொதித்ததும், வறுத்த அவலை முந்திரி திராட்சையோடு சேர்த்து மூடிவைத்து வேகவைக்கவேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி தட்டிய பாகு வெல்லத்தை சேர்த்து அவை கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவேண்டும்.

அவல் நன்றாக வெந்ததும், வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு மிதமான சூட்டில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அவை கெட்டியாக மாறும்போது ஏலக்காய்த்தூள் மற்றும் மீதமுள்ள நெய்யையும் சேர்த்து திரண்டு ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவேண்டும். தித்திக்கும் அவல் சர்க்கரை பொங்கல் தயார்.

இந்த தமிழ் குரோதி வருட புத்தாண்டுக்கு இதைச் செய்து கட்டாயம் சாப்பிட்டு மகிழுங்கள்.

அவல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுப்பொருள். இதில் பல்வேறு வித்யாசமான உணவுகள் செய்யலாம். இனிப்பு உப்புமா, கார உப்புமா, தக்காளி உப்புமா, எலுமிச்சை உப்புமா என அனைத்தும் செய்யலாம்.

இதை டிபஃன் மற்றும் ஸ்னாக்ஸ் என எதற்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்னி அட்டகாசமான சுவையாக இருக்கும்.

அவலில் இதுபோல் வித்யாசமான உணவுகளை செய்து கொடுத்து உங்கள் குழந்தைகளை அசத்துங்கள். வெறும் அவலை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதுபோன்ற வெரைட்டியான உணவுகளை செய்துகொடுத்தால் சாப்பிட்டு மகிழ்வார்கள். அவலில் பொங்கல் இன்னும் அட்டகாசமான சுவையில் அசத்தும். இது வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவதாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்