தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Skin Foods Benifits:வெறும் வயிற்றில் நெய்யை எடுத்தால் இவ்வளவு பயன்களா?

Skin Foods Benifits:வெறும் வயிற்றில் நெய்யை எடுத்தால் இவ்வளவு பயன்களா?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 10, 2024 08:56 PM IST

பொதுவாக நம் உடலில் எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் காலை பிரம்ம முகூர்த்தத்தில், அந்த பிரச்சினைக்கு தேவையான உணவுகளை எடுக்கும் பொழுது உடனடியான ரியாக்ஷன் இருக்கும்

 தோல் பளப்பளப்பாக மாற எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!
தோல் பளப்பளப்பாக மாற எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்! (Unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, காலையில் எழுந்தவுடன் சுத்தமான பசு நெய்யை, நான்கு டேபிள் ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனை நீங்கள் பல் தேய்த்த பின்னரோ அல்லது பல் தேய்த்ததிற்கு முன்னரோ எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை நல்லெண்ணெய் கொப்பளிப்பு செய்யும் நபராக இருந்தால், அதனை செய்து முடித்த பின்னர் இதனை எடுத்துக்கொள்ளுங்கள். நெய்யை குடித்த உடன் இரண்டு டம்ளர் வெந்நீரை எடுத்துக்கொள்ளுங்கள். 

பொதுவாக நம் உடலில் எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் காலை பிரம்ம முகூர்த்தத்தில், அந்த பிரச்சினைக்கு தேவையான உணவுகளை எடுக்கும் பொழுது உடனடியான ரியாக்ஷன் இருக்கும். 

 உடனடியாக ரியாக்ஷன் என்றவுடன் நீங்கள் உடனே பலன் கிடைத்து விடும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அப்படியான உணவு செயல்முறையை கிட்டத்தட்ட நீங்கள் ஒரு வருடம் தொடர்ந்து செய்ய வேண்டும் அப்போதுதான் பலன் கிடைக்கும். 

எடுத்துக்காட்டாக உங்களுக்கு கண்ணில் பிரச்சினை இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதிகாலை எழுந்தவுடன் பல தேய்த்து விட்டு, ஒரு கேரட் ஜூஸை குடித்தால், அந்த கேரட் ஜூஸில் இருக்கக்கூடிய மொத்த சத்தும் உங்கள் உடலுக்கு சேரும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கேரட் ஜூஸை எடுத்த பின்னர் நீங்கள் நிச்சயமாக வாக்கிங் செல்ல வேண்டும். 

கேரட் ஜூஸை எடுத்துக் கொண்டு சும்மா உட்கார்ந்தால் அந்த பலன் கிடைக்காது.  தண்ணீரில் சீரகத்தையும், சியா விதைகளையும் போட்டு குடிப்பது உங்களது தோலை இன்னும் பளபளப்பாக மாற்றும். 

அதேபோல மாதுளம் பழம் ஜூஸில் சர்க்கரையும், பாலும் சேர்க்காமல் எடுத்துக் கொள்வதும் உங்களது தோலை பளபளப்பாக மாற்றும். 

அதேபோல டிரை ஃப்ரூட்ஸ் களை ஜூஸ் ஆக எடுத்துக் கொள்ளும் பொழுதும், நமது தோல் பளபளப்பாக மாறும். உடலில் நன்றாக வேர்வை வரும் பொழுதும், உங்களது தோல் பளபளப்பாக மாறும் அதேபோல கற்றாழை ஜூஸை எடுத்துக் கொள்வதும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்" என்று பேசினார் 

வெயிலுக்கு இதமான ராகி கஞ்சி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

முழு கேழ்வரகு – ஒரு கப்

சிவப்பு வாழைப்பழம் – 1

பேரிட்சைப்பழம் – 10 (விதைகள் நீக்கியது)

தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்

செய்முறை

கேழ்வரகை அலசி ஓரிரவு அல்லது 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறியபின் தண்ணீரை வடித்து ஒரு வெள்ளை துணியில் கட்டி, ஒரு டப்பாவில் இரண்டு நாட்கள் அப்படியே மூடி வைத்துவிடவேண்டும்.

நன்றாக முளைக்கட்டி வந்திருக்கும். அதை எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதை பாலாக பிழிந்து, அந்த பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவேண்டும்.

பின்னர், வாழைப்பழம் மற்றும் பேரிட்சை பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதை கலவையை கொதித்துக்கொண்டிருக்கும் கேழ்வரகில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

அனைத்தும் நன்றாக இணைந்து கஞ்சி பதம் வந்தவுடன், அதை அடுப்பில் இருந்து இறக்கி தேங்காய் பூ தூவி அப்படியே பருகவேண்டும்.

ஒரு நாள் காலை உணவுக்கு பதிலாக இந்த கஞ்சி மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடியதுடன் காலையில் டிபஃன் செய்யும் வேலையும் குறையும்.

இந்த வெயில் காலத்தில் ராகி கஞ்சி உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும்.

ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.

குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதய நோய்களை தடுக்கிறது.

அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்