தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Apply For Home Loan : வீட்டு லோன் வாங்க போறீங்களா? குறைந்த வட்டி பெறுவது எப்படி உள்ளிட்ட முழு விவரங்கள் இங்கே!

Apply for Home Loan : வீட்டு லோன் வாங்க போறீங்களா? குறைந்த வட்டி பெறுவது எப்படி உள்ளிட்ட முழு விவரங்கள் இங்கே!

Priyadarshini R HT Tamil
Aug 07, 2023 12:01 PM IST

Applying for a Home Loan. Things to Know : வீட்டுக்கடன் வாங்குபவர்கள் கூடுதல் வட்டியைத்தான் செலுத்தி வருகிறீர்கள். கிட்டத்தட்ட வாங்கிய கடனை விட கூடுதல் தொகையை கடனாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. உங்கள் வீட்டுக்கடனுக்கு குறைந்த வட்டி பெறுவது எப்படி?

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் முறையாக செலுத்தும் தொகையை அதிகமாக செலுத்திவிட்டால், உங்களின் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

வீட்டுக்கடனுடன் கூடுதலாக ஏதாவது தொகை செலுத்த வேண்டுமா? சில நேரங்களில் கடன் கொடுப்பவர்கள் கூடுதல் பல்வேறு செலவினங்கள் குறித்து விளக்கிக்கூற மாட்டார்கள். நிச்சயம் கூடுதல் ப்ராசசிங் தொகை செலுத்த வேண்டியிருக்கும். அது நீங்கள் பெறும் கடன் அளவைப்பொறுத்தது. நீங்கள் வாங்கப்போகும் அல்லது கட்டப்போகும் வீட்டின் சந்தை விலை குறிதுத நிபுணர்களின் ஒப்புதல் பெறவேண்டிய நிலை ஏற்படும். அதற்கு அவர்கள் வந்து செல்ல கடன் வாங்குபவர்தான் செலவு செய்ய வேண்டும். நீங்கள் வாங்கிய கடனை முடித்துக்கொள்ள நினைத்தீர்கள் என்றால், என்று முடிக்கிறீர்களோ அந்த மாத இறுதி வரைக்கும் வட்டி செலுத்த வேண்டும். இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட் கூடுதல் செலவுகள் நிச்சயம் ஏற்படும்.

இப்போது வீட்டுக்கடன் செலுத்துபவர்கள் வட்டி குறைவதற்காக வேறு ஒரு கடன் கொடுப்பவரிடம் செல்ல முடியுமா?

ஆம் குறைந்த வட்டிக்காக நீங்கள் வேறு ஒரு கடன் கொடுப்பவரிடம் உங்கள் பழைய இடத்தில் இருந்து கடன் தொகையை மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு வீட்டுக்கடன் ரீஃபைனான்சிங் அல்லது கடன் ரீஃபைனான்சிங் என்று பெயர். இது வீட்டுக்கடன் வாங்கியவரை தற்போது உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்ற வழி வகுக்கிறது. ஆனால் அதற்கு நல்ல லாபம், வட்டி விகிதம் குறைவு ஆகியவை உள்ளதா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

வீட்டுக்கடன் வேரியபிள் வட்டி விகிதத்தில் உள்ள ஆபத்துகள் என்ன?

வேரியபிள் இன்ட்ரஸ் ரேட் என்பது மாறும் வட்டிவிகிதம் ஆகும். இது சில சூழல்களில் நல்லதுதான். ஆனால் இதில் ஆபத்துக்கள் உள்ளது. இது கால அடிப்படையில் மாறக்கூடிய தன்மை கொண்டுள்ளது. மாத தவனையில் சில நேரங்களில் அது நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி விடும். சில நேரங்களில் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தும். அது உங்களுக்கு அந்த மாத பட்ஜெட்டில் சுமையை ஏற்றிவிடும். மேலும் எதிர்காலத்தில் எப்படி மாறும் என்று கணிக்கவும் முடியாமல் சிரமத்தை ஏற்படுத்திவிடும். குறிப்பிட்ட அளவு நிர்ணயிக்கப்பட்ட வருமானம் உள்ள குடும்பத்தினருக்கு இது சுமையை ஏற்றிவிடும்.

சிபில் ஸ்கோர் என்பது கடன் வாங்குவதற்கு தேவையான ஒன்று. அது சரியாக இருந்தால் மட்டுமே நாம் எவ்வித கடனையும் எளிதாக பெற முடியும். அதற்கு அவர்கள் ஏற்கனவே பெற்ற கடனை முறையாக அடைத்திருக்க வேண்டும். பழைய கடன் திருப்பி செலுத்துவதில் இருந்த தொய்வுகள், ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் சோதிப்பார்கள். மொத்த கடன் தொகை, சொத்து மதிப்பு, வருமானம் என அனைத்தையும் கணக்கிட்டு ஒருவரால் எவ்வளவு கடனை சமாளிக்க முடியும் என்று தெரிந்துகொண்டு பின்னர் அவர்களின் ஸ்கோர் மதிப்பிடப்படும். எனவே ஏற்கனவே உள்ள கடன், கிரெடிட் கார்டுகள் என அனைத்தும் ஒருவரின் ஸ்கோரை பாதிக்கும் என்பதால் எப்போது கடன் வாங்கினாலும், அதை திருப்பி செலுத்வதில் கவனமாக இருந்தால் மட்டுமே நீங்கள் வீட்டுக்கடன் பெறும்போது சிரமங்கள் இருக்காது.

WhatsApp channel

டாபிக்ஸ்