Nellikai Rasam : இப்படி ஒரு ரசம் செய்து கொடுங்க.. அப்புறம் பாருங்க தினமும் கேப்பாங்க.. நெல்லிக்காய் ரசம் செய்யலாமா?
நெல்லிக்காய் ரசம் நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல் நம்மை இளமையாகவும் வைத்திருக்குமாம். அவ்வளவு நன்மைகள் இந்த நெல்லிக்காய் ரசத்தில் இருக்கிறது. இந்த நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
நெல்லிக்காய் ரசம்
தேவையான பொருட்கள்
ஒரு ஸ்பூன் சீரகம்
ஒரு ஸ்பூன் வர மல்லி
ஒரு ஸ்பூன் மிளகு
இரண்டு காய்ந்த மிளகாய்
மூன்று அல்லது நான்கு நெல்லிக்காய்
பத்து பல் பூண்டு
2 டீஸ்பூன் எண்ணெய்
ஒரு தக்காளி
துவரம் பருப்பின் தண்ணீர்
கொத்தமல்லி
உப்பு
மஞ்சள் தூள்
நெல்லிக்காய் சைஸ் புளி
நெய்
கடுகு
கள்ள பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை
நெல்லிக்காய் ரசம் செய்முறை
இந்த நெல்லிக்காய் ரசம் நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல் நம்மை இளமையாகவும் வைத்திருக்குமாம். அவ்வளவு நன்மைகள் இந்த நெல்லிக்காய் ரசத்தில் இருக்கிறது. இந்த நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வர மல்லி, ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் விதைகளை நீக்கிய மூன்று அல்லது நான்கு நெல்லிக்காய், பத்து பல் பூண்டு சேர்த்து நன்கு தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு மைய அரைக்க வேண்டும் என்பதில்லை தட்டி எடுத்துக் கொண்டாலே போதும்.
பின்னர் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நாம் தட்டி வைத்த இந்த நெல்லிக்காயை போட்டு வதக்கவும். பின்னர் அதில் நன்கு பழுத்த ஒரு தக்காளியை கையில் பிசைந்து அதில் சேர்க்கவும். பின்னர் நாம் ஊற வைத்த துவரம் பருப்பின் தண்ணீர் ஊற்றி, கொத்தமல்லியின் தண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தக்காளி வேகம் அளவிற்கு கொதிக்க விடவும்.
பின்னர் ஒரு நெல்லிக்காய் சைஸ் புளி கரைசலை ஊற்றி கொத்தமல்லி தலையை தூவி விடவும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். அது கொதித்துக் கொண்டு இருக்கட்டும்.
பின்ன தாளிப்பு கரண்டியில் ஒரு டீஸ்பூன் நெய், கடுகு, கள்ள பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். இதனை நாம் ரெடி பண்ணி வைத்த ரசம் அடுப்பை அணைத்துவிட்டு இதனை சேர்க்கவும். அவ்வளவுதான் ருசியான ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் ரெடி.
நெல்லிக்காயின் நன்மைகள்
மிகவும் குறைவான விலைக்கு கிடைக்கும் இந்தப் நெல்லிக்கா பழத்தில் சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது. நெல்லிக்காயை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நமது தோல் மற்றும் முடி பளபளக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இது நீரிழிவு நோயைக் குறைக்கிறது. நெல்லிக்காய் டீ மற்றும் ஜூஸ் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.
மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது.இதை தினமும் எடுத்துக்கொள்வது செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.
ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது. அல்சரை குணப்படுத்துகிறது.
நெல்லிக்காய் லேகியமாக இருந்தாலும், இது ஜாம்போல்தான் இருக்கும் எனவே இதை சாப்பாத்தி மற்றும் பிரட்டில் வைத்து சாப்பிடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்