Amla Legiyum : உடலில் நோய்களை அடித்து விரட்டும் நெல்லிக்காய் லேகியம்! வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!-amla legiyum gooseberry legiyum that fights diseases in the body can be done at home heres the recipe - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Legiyum : உடலில் நோய்களை அடித்து விரட்டும் நெல்லிக்காய் லேகியம்! வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!

Amla Legiyum : உடலில் நோய்களை அடித்து விரட்டும் நெல்லிக்காய் லேகியம்! வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Mar 27, 2024 11:21 AM IST

Amla Legiyum : நெல்லிக்காயில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இதை தினமும் எடுத்துக்கொள்வது ஒருவரின் வாழ்நாளை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

Amla Legiyum : உடலில் நோய்களை அடித்து விரட்டும் நெல்லிக்காய் லேகியம்! வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!
Amla Legiyum : உடலில் நோய்களை அடித்து விரட்டும் நெல்லிக்காய் லேகியம்! வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி! (24 farms )

இதன் துவர்ப்பு சுவையால் இதை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே நெல்லிச்சாறு, நெல்லி தேநீர் என செய்து அசத்தலாம். இதில் லேகியம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

நெல்லிக்காயின் நன்மைகள் 

மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது

நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது.

இதை தினமும் எடுத்துக்கொள்வது செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது.

இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.

ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது.

அல்சரை குணப்படுத்துகிறது.

நெல்லிக்காய் லேகியமாக இருந்தாலும், இது ஜாம்போல்தான் இருக்கும் எனவே இதை சாப்பாத்தி மற்றும் பிரட்டில் வைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 400 கிராம்

கருப்புட்டி அல்லது வெல்லம் – அரை கிலோ

சுக்குப்பொடி – ஒன்றரை ஸ்பூன்

அதிமதுரம் பொடி – ஒரு ஸ்பூன்

பட்டைப் பொடி – கால் ஸ்பூன்

ஜாதிக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்

நெய் – 50 மிலி

நல்லெண்ணெய் – 50 மிலி

தேன் – 50 மிலி

அரைக்க தேவையான பொருட்கள்

திப்பிலி – 5 கிராம்

உலர் கிராட்சைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கிராம்பு – 6

ஏலக்காய் – 3

செய்முறை

நெல்லிக்காயை கழுவி வேகவைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்த்தும் வேகவைக்கலாம். இட்லி பாத்திரத்தில் வைத்தும் வேகவைத்துக்கொள்ளலாம். நன்றாக வெந்தவுடன் இறக்கிவிடவேண்டும்.

இதை ஆறவைத்து, விதைகளை நீக்கிவிட்டு, சதைப்பகுதியை மட்டும் எடுத்து, அரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏலக்காய், கிராம்பு, திப்பிலி ஆகிய அனைத்தையும் எடுத்து அரைக்க வேண்டும். பின்னர் உலர் திராட்சையை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கருப்புட்டியை பொடித்து, அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். சூடான தண்ணீர் சேர்த்தால் விரைவில் கரையும். இதன் மூலம் அதில் உள்ள தூசிகள் நீங்கும்.

கடாயை சூடாக்கி, அதில் வெல்லம் அல்லது கருப்பட்டி கரைசலை சேர்க்க வேண்டும். பின்னர் நெல்லிக்காய் பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். நன்றாக கலந்து, 20 நிமிடம் சமைக்க வேண்டும். குறைவான தீயில்வைத்து தண்ணீர் வற்றும் வரை நன்றாக கலக்க வேண்டும்.

இப்போது எடுத்து வைத்துள்ள சுக்கு, அதிமதுரம், பட்டை மற்றும் ஜாதிக்காய் பொடிகளை சேர்க்க வேண்டும். குறைவான தீயில் 5 நிமிடம் கிளறவேண்டும்.

இப்போது நெய் சேர்த்து கிளறவேண்டும். பின்னர் அரைத்து வைத்து ஏலக்காய் பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.

பின்னர் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்றா கலந்து, எண்ணெயை லேகியம் உள்ளிழுக்கும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஜாம் பதத்துக்கு வந்தவுடன், இதில் தேன் சேர்த்து இறக்கவேண்டும். நன்றாக கலந்து, ஆறியவுடன் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும்போது, இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி, பிரட் என எதனுடன் வேண்டும்மானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் அல்லது தினமும் ஒரு உருண்டை உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள ஆரோக்கியம் அதிகரிக்கும்.

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.