தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Benefits Of Sapota: சப்போட்டா பழத்தை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

Health Benefits Of Sapota: சப்போட்டா பழத்தை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
May 31, 2023 02:10 PM IST

Sapota Fruit: எளிதில் கிடைக்கும் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

சப்போட்டா பழம்
சப்போட்டா பழம்

ட்ரெண்டிங் செய்திகள்

சப்போட்டா பழத்தை ஜூஸாக்கி குடித்தாலும், அப்படியே சாப்பிட்டாலும் சுவை அலாதியாக இருக்கும். எளிதில் செரிமானிக்கக் கூடிய இந்த பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி நீங்கள் சுவைத்து சாப்பிடும் சப்போட்ட மூலம் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.

சப்போட்டாவில் உள்ள குளுகோஸ் நமக்கு ஆற்றலை தருகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் ரத்த நாளங்களை சீராக வைக்கவும், கொழுப்பை நீக்கவும் செய்கிறது. சப்போட்டாவைச் சாப்பிடுவது, சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும். காச நோயால் பாதிக்கப்பட்டவர் சப்போட்டா பழச் சாற்றுடன் ஒரு நேந்திரம் பழம் சாப்பிட்டால் காச நோய் விரைவாக குணமாகும். சப்போட்டா பழச்சாறுடன் தேயிலைச் சாறும் சேர்த்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும், ரத்தக் கடுப்பு நிற்கும். சப்போட்டாவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், பிற செரிமான பிரச்சினைகளை சீராக்க உதவுகிறது.

தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் சப்போட்டாவில் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. சப்போட்டாவில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அதைச் சாப்பிடுவது நம் உடல் நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்தும். சப்போட்டா பழத்தில், ஆன்டிபாக்டீரியல், ஆன்டி வைரல் பண்புகள் மிகுந்து காணப்படுவதால், ஜலதோஷம், பருவகால காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது.

சப்போட்டாவில் உள்ள குளுகோஸ் நமக்கு ஆற்றலை தருகிறது. ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். இதயத்துக்கு வலிமையைச் சேர்க்கிறது. சப்போட்டா பழம் சாப்பிடுவதால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் சப்போட்டாவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், தொண்டையில் அரிப்போ வாயில் புண்ணோ ஏற்படலாம்.  

குறிப்பாக, சரியாக பழுக்காத பச்சையான சப்போட்டாவைத் தவிர்க்க வேண்டும். சப்போட்டாவைக் காயாகச் சாப்பிட்டால், தொண்டையில் அரிப்பு, வாயில் புண் போன்றவற்றோடு, செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளும் சேர்ந்து ஏற்படலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்