தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Spices Day 2023: இந்த நாளை மசாலா பொடிகளுடன் இனிதே கொண்டாடுங்கள் - ஏன் தெரியுமா?

World Spices Day 2023: இந்த நாளை மசாலா பொடிகளுடன் இனிதே கொண்டாடுங்கள் - ஏன் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Jun 10, 2023 09:59 AM IST

World Spices Day 2023: இன்று (ஜூன் 10) உலக மசாலா தினம். இந்த நாளில் மசாலாக்கள் நம் உடல் நலன்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

மசாலா பொருட்கள்
மசாலா பொருட்கள் (Pexels)

ட்ரெண்டிங் செய்திகள்

உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாக்கள் 13 சதவீதம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து 20 சதவீதம் சர்க்கரை அளவை குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவர் உடல் ஆரோக்கியத்துடன் வாழ நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு குடல் நலமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மசாலாக்களில் இஞ்சி, செரிமானத்துக்கு உதவும். இதில் உள்ள ஜிஞ்சரால் எனும் எண்ணெய் வயிற்றில் உணவை கரைக்கும் போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல் மற்றும் உணவு குழாயில் தேங்கவிடாமல் வெளியேற்றுகிறது. மஞ்சல் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

லவங்கத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் செரிமானத்துக்கு உதவுகிறது. அதோடு செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவை கட்டுப்படுத்தி வாந்தி மற்றும் குமட்டல் வராமல் தடுக்கிறது. லவங்கத்தில் உள்ள யூஜினோல் என்ற அமிலம் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த நிவாரண பொருளாக செயல்படுகிறது.

சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் இரைப்பை ஒவ்வாமையை குணமாக்கும். மேலும், நாள்பட்ட செரிமான பிரச்சனைகளால் மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது. நம் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை அகற்றுவதில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல், மிளகு ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும், குடல் மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவை பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டவை. இந்த மசாலா பொருட்களை உணவில் தாராளமாக சேர்த்துக்கொள்பவர்கள் சாதாரண உணவு உண்பவர்களை விட அதிக நாட்கள் உயிர்வாழ்வதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் மசாலா பொருட்களை அளவாகத்தான் பயன்படுத்த வேண்டும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். இன்று (ஜூன் 10) உலக மசாலா தினம். உலக மசாலா தினம் 2015ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

உணவுகளில் நிறம், மணம், சுவைக்காகவே மசாலாக்கள் பயன்படுத்தப்படுவதாக நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், மசாலாக்களுக்கும் உடல் நலன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மசாலா பொடிகள் அவசர உணவுக்கு மட்டுமல்ல, குடல் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாகவும் திகழ்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்