வித்யாசமான மஸ்ரும் ஃப்ரைட் ரைஸ்! காளான் பிரியர்கள் விடவே மாட்டார்கள்! நல்ல ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வித்யாசமான மஸ்ரும் ஃப்ரைட் ரைஸ்! காளான் பிரியர்கள் விடவே மாட்டார்கள்! நல்ல ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட!

வித்யாசமான மஸ்ரும் ஃப்ரைட் ரைஸ்! காளான் பிரியர்கள் விடவே மாட்டார்கள்! நல்ல ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட!

Priyadarshini R HT Tamil
Nov 29, 2024 02:26 PM IST

காளான் ஃப்ரைட் ரைஸ் செய்ய கற்றுக்கொள்ளலாமா?

வித்யாசமான மஸ்ரும் ஃப்ரைட் ரைஸ்! காளான் பிரியர்கள் விடவே மாட்டார்கள்! நல்ல ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட!
வித்யாசமான மஸ்ரும் ஃப்ரைட் ரைஸ்! காளான் பிரியர்கள் விடவே மாட்டார்கள்! நல்ல ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட!

தேவையான பொருட்கள்

சின்னவெங்காயம் – ஒரு கைப்பிடியளவு

பூண்டு – 5 பல்

வர மிளகாய் – 4

தக்காளி – மீடியம் சைஸ்

(இவையனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நல்ல மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம் – 2

ஏலக்காய் – 1

பிரியாணி இலை – 1

ஸ்டார் சோம்பு – 1

பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

சோம்பு – ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – பூண்டு விழுது – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

மல்லித்தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

காளான் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கியது)

உதிரியாக வடித்த பாஸ்மதி அரிசி சாதம் – ஒரு கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு என அனைத்தையும் சேர்த்து பொரியவிடவேண்டும். பின்னர் அதில் இஞ்சி – பூண்டு விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அடுத்து அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இதை பச்சை வாசம் போகும் வரை வதக்கியவுடன், அதில் அரைத்த விழுதை சேர்த்து அதையும் நன்றாக வதக்கவேண்டும்.

காளானை சேர்த்து வதக்கும்போது தண்ணீர் வரும் அந்த தண்ணீர் வற்றும் வரை வதக்கவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான காளான் சாதம் தயார். இதற்கு வெங்காயம், வெள்ளரி ரைத்தா வைத்து பரிமாறலாம். சூப்பர் சுவையாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.