மழைக்காலத்தில் சளியை விரட்டியடிக்கும் ஒரு சூப்! ஒருமுறை பருகினாலே போதும்! மாயம் செய்யும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மழைக்காலத்தில் சளியை விரட்டியடிக்கும் ஒரு சூப்! ஒருமுறை பருகினாலே போதும்! மாயம் செய்யும்!

மழைக்காலத்தில் சளியை விரட்டியடிக்கும் ஒரு சூப்! ஒருமுறை பருகினாலே போதும்! மாயம் செய்யும்!

Priyadarshini R HT Tamil
Oct 28, 2024 11:57 AM IST

மழைக்காலத்தில் சளியை விரட்டியடிக்கும் ஒரு சூப். நண்டு வைத்து இப்படி எளிய முறையில் செய்யலாம். ஒருமுறை பருகினாலே போதும்! மாயம் செய்யும்.

மழைக்காலத்தில் சளியை விரட்டியடிக்கும் ஒரு சூப்! ஒருமுறை பருகினாலே போதும்! மாயம் செய்யும்!
மழைக்காலத்தில் சளியை விரட்டியடிக்கும் ஒரு சூப்! ஒருமுறை பருகினாலே போதும்! மாயம் செய்யும்!

அறிகுறிகள்

வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 முதல் 3 நாட்களில் அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.

சளி ஒழுகுதல்

தொண்டையில் கரகரப்பு, புண், தொண்டை கட்டிக்கொள்வது

இருமல்

தும்மல்

உடல் நலன் பாதிக்கப்படுவது

உடல் வலி மற்றும் தலைவலி

குறைவான காய்ச்சல்

மூக்கில் உள்ள சளி, கெட்டியாக வாய்ப்பு ஏற்படும். அது மஞ்சள் அல்லது பச்சை நிறத்துக்கு மாறும். இவையனைத்து வழக்கமானது. இவை ஏற்பட்டால் உங்களுக்கு பாக்டீரியாக்கள் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம் கிடையாது.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

பெரும்பாலும் உங்களுக்கு மருத்துவ கவனம் தேவையில்லை. ஆனால் பின்வரும் பிரச்னைகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் செல்லவேண்டும்.

இந்த அறிகுறிகள் மோசமானால், சரியாகவில்லையென்றால் உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும்.

101.3 டிகிரி காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

காய்ச்சல் முடிந்து மீண்டும் காய்ச்சல் வந்தால் மருத்துவ கவனம் தேவை.

மூச்சுத்திணறல், மூச்சு வாங்குவது, வீசிங், தொண்டையில் கடும் புண், தலைவலி, சைனஸ் வலி ஆகியவை ஏற்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும்.

குழந்தைகளுக்கு,

குழந்தைகளுக்கு சளி ஏற்பட்டால் பெரும்பாலும் மருத்துவ உதவி தேவையில்லை. ஆனால் கீழ்கண்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

பிறந்த குழந்தைகள் முதல் 12 வாரம் வரையில் உள்ள குழந்தைகளுக்கு 100.4 டிகிரி காய்ச்சல் ஏற்பட்டால்,

காய்ச்சல் அதிகரித்தால், எந்த வயது குழந்தைக்கும் 3 நாளைக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால்,

அறிகுறிகள் தீவிரமானால், தலைவலி, தொண்டை வலி மற்றும் இருமல் ஏற்பட்டால்,

மூச்சுத்திணறல் அல்லது வீசிங் ஏற்பட்டால்,

காது வலி வந்தால்,

சாப்பிடப்பிடிக்காமல் போனால்,

மயக்கம், சோர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டும்.

சளி பிடித்தால் அதற்கு நாம் சில வீட்டு முறை வைத்தியங்களையும், உணவுப் பழக்கங்களையும் பின்பற்றலாம். எனவே சளி பிடித்தால் இதேபோல் ஒரு முறை நண்டு சூப் வைத்து சாப்பிடுங்கள. விரைவில் குணமாகிவிடும். இந்த நண்டு சூப் செய்வது எளிது.

தேவையான பொருட்கள்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பூண்டு – 8 பல்

இஞ்சி – கால் இன்ச்

சின்ன வெங்காயம் – 10 பல்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

நண்டு – அரை கிலோ

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – ஒரு கொத்து

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகத்தைச் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும். அடுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து தட்டிக்கொள்ளவேண்டும்.

நீங்கள் இஞ்சி, பூண்டு பேஸ்டாக எடுத்துக்கொண்டாலும் சரி. அடுத்து அதோ மிக்ஸி ஜாரில், சின்ன வெங்காயத்தை சேர்த்து ஒன்றிரண்டாக அடித்துக்கொள்ளவேண்டும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, அரைத்த பொருட்களை சேர்த்து வதக்கிவிடவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். தேவையான அளவு உப்பு, மல்லித்தழை, கறிவேப்லிலை மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கிவிட்டால் போதும். சூப்பர் சுவையில் நண்டு சூப் தயாரானதுடன், நீங்கள் பருகினால் சளி ஓடிவிடும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.