வைட்டமின் டி சத்து குறைபாடு இருப்பதை வெளிக்காட்டும் 5 அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 27, 2024

Hindustan Times
Tamil

ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வைட்டமன் டி முக்கியமானதாக உள்ளது. நோய் எதிர்ப்பு செயல்பாடு, மனநிலை மாற்றம், எலும்பு வலிமை போன்ற பல்வேறு நன்மைகளை தருகிறது

தொற்று பாதிப்பு, சோர்வு, முதுகு வலி உள்பட வைட்டமின் டி குறைப்பாட்டை வெளிக்காட்டும் அறிகுறிகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவாக இருந்து வரும் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்பட்டால், அடிக்கடி சளி பிடித்தல், காய்ச்சல் அல்லது தொற்று பாதிப்புகள் ஏற்படும்

வைட்டமின் டி குறைவாக இருப்பதை உணர்த்தும் விதமாக போதிய தூக்கம் மற்றும் ஓய்வு இருந்தாலும் சோர்வு, ஆற்றல் குறைபாடு போன்றவை ஏற்படக்கூடும்

கால்சியம் சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவிகரமாக இருக்கும் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், எலும்பு வலி, குறிப்பாக் முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படும். எலும்புகள் சார்ந்த கோளாறு ஏற்படும்

மனநிலை மாற்றம், மனசோர்வு போன்றவை ஏற்படுவதோடு மூளையின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படும்

சருமத்தின் சேதங்களை போக்கி மீளுருவாக்கம் செய்வதில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் குறைபாடு ஏற்பட்டால் உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைவதற்கு நீண்ட காலம் ஆகும்

மாதவிடாய் வலியை போக்க கற்றாழை உதவுமா?