புரதச்சத்துக்களை அள்ளி வழங்கும் காலை உணவு! நீங்கள் பராத்தா பிரியர் என்றால் இதை செய்யுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  புரதச்சத்துக்களை அள்ளி வழங்கும் காலை உணவு! நீங்கள் பராத்தா பிரியர் என்றால் இதை செய்யுங்க!

புரதச்சத்துக்களை அள்ளி வழங்கும் காலை உணவு! நீங்கள் பராத்தா பிரியர் என்றால் இதை செய்யுங்க!

Priyadarshini R HT Tamil
Nov 12, 2024 12:28 PM IST

புரதச்சத்துக்களை அள்ளி வழங்கும் காலை உணவு என்ன தெரியுமா? நீங்கள் பராத்தா பிரியர் என்றால் இதை செய்யலாம். பன்னீர் பிடிக்கும் என்றாலும் இது உங்களுக்கு நல்லது.

புரதச்சத்துக்களை அள்ளி வழங்கும் காலை உணவு! நீங்கள் பராத்தா பிரியர் என்றால் இதை செய்யுங்க!
புரதச்சத்துக்களை அள்ளி வழங்கும் காலை உணவு! நீங்கள் பராத்தா பிரியர் என்றால் இதை செய்யுங்க!

தேவையான பொருட்கள்

பன்னீர் – ஒரு கப்

கோதுமை மாவு – 2 கப்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

மிளகுத் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

இஞ்சி – அரை இன்ச் (துருவியது)

ஓமம் – அரை ஸ்பூன்

செய்முறை

பன்னீரை துருவி வைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகிய அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து, நடுவில் ஒரு ஸ்பூன் பன்னீரை கலவையை வைத்து மூடி மீண்டும் தேய்த்து பராத்தாக்களாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, இந்த பராத்தக்களை நெய் அல்லது எண்ணெய் சேர்த்து இரண்டுபுறத்திலும் நன்றாக சுட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா மட்டுமே போதுமானது. ஏனெனில் பராத்தாவிலே பன்னீர் உள்ளதால், அதனால், இதற்கு ரைத்தா மட்டுமே போதுமானது.

பன்னீரின் நன்மைகள்

100 கிராம் பன்னீரில் 20 கிராம் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.

புற்றுநோய் இன்றைய காலத்தில் அதிகளவில் ஏற்படுகிறது. பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு மத்தியில் சராசரியாக 10 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் இந்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பன்னீரில் அதிகளவில் வைட்டமின் டி சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இவையிரண்டும் மார்பக புற்றுநோயை தடுக்கக்கூடியவை. பன்னீரில் உள்ள சிஃபிங்கோலிபிட்ஸ் மற்றும் அதிகளவிலான புரதம் குடல் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை முதல் நிலையிலே எதிர்த்து போராட உதவுகிறது.

பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது.

செரிமான மண்டலத்தின் வழக்கமான இயக்கத்துக்கு உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.

பன்னீர் நோயிலிருந்து காப்பாற்றுகிறது.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.