Carrot 65 Masala : சிக்கன், பன்னீரில் இருக்கு! கேரட்ல 65 மசாலா தெரியுமா? இதைவிட சூப்பரான ஸ்னாக்ஸ் இருக்க முடியாது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Carrot 65 Masala : சிக்கன், பன்னீரில் இருக்கு! கேரட்ல 65 மசாலா தெரியுமா? இதைவிட சூப்பரான ஸ்னாக்ஸ் இருக்க முடியாது!

Carrot 65 Masala : சிக்கன், பன்னீரில் இருக்கு! கேரட்ல 65 மசாலா தெரியுமா? இதைவிட சூப்பரான ஸ்னாக்ஸ் இருக்க முடியாது!

Priyadarshini R HT Tamil
Sep 08, 2024 08:58 AM IST

Carrot 65 Masala : சிக்கன், பன்னீரில் சாப்பிட்டு இருப்பீர்கள். கேரட்டில் 65 மசாலா தெரியுமா? இதைவிட சூப்பரான ஸ்னாக்ஸ் இருக்க முடியாது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Carrot 65 Masala : சிக்கன், பன்னீரில் இருக்கு! கேரட்ல 65 மசாலா தெரியுமா? இதைவிட சூப்பரான ஸ்னாக்ஸ் இருக்க முடியாது!
Carrot 65 Masala : சிக்கன், பன்னீரில் இருக்கு! கேரட்ல 65 மசாலா தெரியுமா? இதைவிட சூப்பரான ஸ்னாக்ஸ் இருக்க முடியாது!

தேவையான பொருட்கள்

கேரட் – கால் கிலோ

இஞ்சி – பூண்டு விழுது – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – கால் ஸ்பூன்

கார்ன் ஃப்ளோர் – 2 ஸ்பூன்

பச்சரிசி மாவு – ஒரு ஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

ஊறவைத்து அரைக்க தேவையான பொருட்கள்

வரமிளகாய் – 2

சோம்பு – அரை ஸ்பூன்

முந்திரி – 8

(இவற்றை அரைமணி நேரம் ஊறவைத்துவிடவேண்டும். பின்னர் மிக்ஸியில் சேர்த்து நல்ல பேஸ்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்)

மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி – பூண்டு விழுது – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து, வட்ட துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும்.

அதை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கார்ன் ஃப்ளோர் மாவு, பச்சரிசி மாவு, எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக கேரட்டில் அனைத்தும் கோட்டிங் ஆகும் வரை பிசைந்து, சிறிது நேரம் ஊறவிடவேண்டும்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி, கேரட்களை தனித்தனியாக சேர்த்து பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். இதை தனியாகவும் சாப்பிடலாம். மொறுமொறுப்பாக நன்றாக இருக்கும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அதில் மசாலாவையும் சேர்த்து அனைத்தும் பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவேண்டும்.

பின்னர் பொரித்து வைத்துள்ள கேரட்டை சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சுவையான மசாலா தயார். இதை பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு மாலைநேர ஸ்னாக்ஸாக செய்து கொடுத்தால் அவர்கள் சாப்பிட்டு மனம் நிறைவார்கள். பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸாக இது இருக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.