சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையா? அள்ளி அள்ளி சாப்பிட வைக்கும் டெக்னிக் வேண்டுமா? இதோ என்ன செய்யலாம்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையா? அள்ளி அள்ளி சாப்பிட வைக்கும் டெக்னிக் வேண்டுமா? இதோ என்ன செய்யலாம்?

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையா? அள்ளி அள்ளி சாப்பிட வைக்கும் டெக்னிக் வேண்டுமா? இதோ என்ன செய்யலாம்?

Priyadarshini R HT Tamil
Nov 18, 2024 11:59 AM IST

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைக்கும் வழிமுறைகள் என்ன?

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையா? அள்ளி அள்ளி சாப்பிட வைக்கும் டெக்னிக் வேண்டுமா? இதோ என்ன செய்யலாம்?
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையா? அள்ளி அள்ளி சாப்பிட வைக்கும் டெக்னிக் வேண்டுமா? இதோ என்ன செய்யலாம்?

உங்கள் குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால் ஒன்று அவர்களுக்கு உணவு பிடிக்கவில்லை என்று பொருள் அல்லது அவர்களுக்கு வயிற்றில் பிரச்னைகள் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு அதை சொல்லத்தெரியாமல் அவர்கள் சாப்பிட அடம்பிடித்துக்கொண்டு இருக்கலாம். எனவே இங்கு ஒரு பொடியைத் தருகிறோம். இதை உங்கள் குழந்தைகளுக்கு சாப்பிடும் முன்னர் கொஞ்சம் எடுத்து, தேனில் கலந்து கொடுத்து வாருங்கள். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

சுக்கு – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

திப்பிலி – 50 கிராம்

ஏலக்காய் – 5

சீரகம் – 50 கிராம்

நாட்டுச்சர்க்கரை – ஒரு ஸ்பூன்

தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

நாட்டுச்சர்க்கரை தேன் தவிர மேலே கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை, எடுத்து சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்திவிட்டு, நல்ல பொடியாக வைத்துக்கொள்ளவேண்டும். இதை ஒரு ஸ்பூன் நாட்டுச்சர்க்கரையில் கலந்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துவிடவேண்டும்.

இதில் சாப்பிடும் முன் கால் ஸ்பூன் எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட கொடுத்துவிட்டு, பின்னர் சிறிது நேரம் கழித்து சாப்பாடு கொடுத்தால் உங்கள் குழந்தைகளுக்கு பசியைத் தூண்டு ஒரு தட்டு சாதத்தைக் கூடி அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள். 

எனவே அவர்களுக்கு இதுபோல் செய்து கொடுக்கலாம். இதை பெரியவர்களும் எடுத்துக்கொள்ளலாம். பெரியவர் தேன் இல்லாமலே சாப்பிடலாம். இந்த சூரணம் பசியைத் தூண்டுவதுடன் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.