Digestion in Children : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள்! பசி தூண்டும் மந்திரம் போடலாமா? பஞ்ச தீபாக்கினி சூரணம் இதோ!
Digestion in Children : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள்! பசி தூண்டும் மந்திரம் போடலாமா? பஞ்ச தீபாக்கினி சூரணம் இதோ!
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
செரிமானம்
நாம் உண்ணும் உணவு சரியாக செரித்தால்தான், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாகக் கிடைக்கும். வாய்க்குள் உணவு செல்வதற்கு முன்னரே செரிமானம் துவங்குகிறது. நாம் உணவை முதலில் நுகர்கிறோம். அந்த மணம் நமது நாவில் எச்சில் ஊறவைக்கிறது.
பல்லும், நாக்கு உணவை உடைத்து தருகின்றன, எச்சிலில் உள்ள எண்சைம்கள் அவற்றை ஸ்டார்ச்சாக மாற்றுகின்றன. உணவை சவிக்கும்போது அவை உடைக்கப்பட்டு, சிறு துகள்கள் ஆகிறது. இதனால் உணவை எளிதாக விழுங்க முடிகிறது. அது வயிற்றை அடைந்து செரிமானம் நடைபெற்று, நமது உடலுக்கு ஆற்றல கிடைக்கிறது.
நல்ல செரிமானம் வேண்டுமெனில்,
நிறைய தண்ணீர் பருகவேண்டும்.
சரிவிகித உணவு உட்கொள்ளவேண்டும். அதிக பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து உணவுகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அன்றாட உடற்பயிற்சி கட்டாயம்
நீண்ட நேரம் மலம் கழிக்க எடுத்துக்கொள்ளக்கூடாது.
இறைச்சி, முன், முட்டை ஆகியவற்றை சமைத்துதான் சாப்பிடவேண்டும்.
சாப்பிடும் முன்னும், பின்னும் கட்டாயம் கை கழுவவேண்டும்.
தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளை நாடவேண்டும்.
இதுபோது செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படவேண்டிய முயற்சிகளை நாம் செய்யவேண்டும். அப்போதுதான் அது உடலுக்கு ஆரோக்கியம் தரும். ஆனால் குழந்தைகளிடம் நாம் இந்தப்பழக்கங்களை வளர்த்தெடுப்பது கடினமான ஒன்று. எனவே அவர்களுக்கு சில பழக்கங்களை செய்து நாம் அவர்களின் செரிமான மண்டலம் சிறப்புற உதவவேண்டும்.
தேவையான பொருட்கள்
சுக்கு
மிளகு
திப்பிலி
ஏலக்காய்
சீரகம்
செய்முறை
இந்த 5 பொருட்களையும் சமஅளவு எடுத்து நன்றாக ஒவ்வொன்றாக கடாயில் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவேண்டும். இவையனைத்தும் அனைத்து சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்.
இவற்றை சுத்தம் செய்து செய்து எடுத்துக்கொள்ளவேண்டும். தூசிகளை அகற்று வறுக்கும் முன்னர் சிறிது நேரம் வெயில் அல்லது நிழலில் உலர்த்தவேண்டும். சுக்கு, திப்பிலி இரண்டையும், தோல் நீக்கி தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, அந்தப்பொடியை அரை ஸ்பூன் தேனில் கரைத்து குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன் கொடுத்தால், நல்ல பசியை இவை தூண்டும், குழந்தைகளுக்கு செரிமானமும் நன்றாக இருக்கும்.
இவை நாவிற்கு சுர்ரென இருக்கும். இதனால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு தேனை சிறிது அதிகம் கலந்து கொடுகக்வேண்டும். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இவற்றில் உள்ள மிளகு, சுக்கு ஆகியவை குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் ஏற்படாமலும் காக்கும். எனவே கட்டாயம் முயற்சித்து பயன்பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்