தினமும் இரவு உணவுக்கு பின்னர் இந்த பொடி மட்டும் போதும்! உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களைப் பாருங்க!
தினமும் இரவு உணவுக்கு பின்னர் இந்த பொடியில் தேநீர் தயாரித்து பருகிவர உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதையும், இதனால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்றும் பாருங்கள்.

நீங்கள் இந்தப்பொடியை வீட்டிலேயே தயாரித்துவிடமுடியும். இதை நீங்கள் தினமும் இரவு உணவுக்கு பின்னர் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. அதற்கு இந்த சக்திவாய்ந்த மூன்று பொட்கள் மட்டும் தேவைப்படுகிறது. இசாப்கால், வெந்தயம் மற்றும் பட்டை ஆகியவை ஆகும். இசாப்கால் என்பதை நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் இருந்து பெறலாம். இது செரிமானத்தைத் தூண்டி, மலச்சிக்கலைப் போக்குகிறது. இது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. வெந்தயம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பட்டையில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளன. இதனால் இவை மூன்றையும் சேர்த்து பொடிசெய்து வைத்துக்கொண்டு, இரவு உணவுக்கு பின்னர் தேநீராக தயாரித்து பருகினால் போதும் உங்கள் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இந்த மூன்று பொருட்களையும் சமஅளவு எடுத்து பொடித்துவைத்துக்கொண்டு, அதை இரவு உணவு உட்கொண்ட பின்னர் தண்ணீரில் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி பருகவேண்டும்.
எப்போது இந்தப்பொடியை சாப்பிடவேண்டும்?
இதை நீங்கள் உங்கள் இரவு உணவை முடித்த பின்னர் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை மிதமான அளவுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிகம் சாப்பிடக்கூடாது. மூலிகை மருந்துகளை நீங்கள் எடுக்கும்போது கூட உங்களுக்கு அதிகம் சாப்பிடுவதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. எனவே கவனம் தேவை.
நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது
பட்டை, உங்கள் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து, உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் தமனிகளில் உள்ள கொழுப்பை நீக்கும் தன்மைகொண்டது. இது அவற்றில் பிளேக் உருவாவதை தடுக்கிறது.