தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Divorce Marriage: இப்படியான அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு விவாகரத்து உறுதி! - தவிர்க்க செய்ய வேண்டிய வழிகள் இங்கே!

Divorce Marriage: இப்படியான அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு விவாகரத்து உறுதி! - தவிர்க்க செய்ய வேண்டிய வழிகள் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 06, 2023 06:20 PM IST

உங்கள் திருமண வாழ்வில் இப்படியான அறிகுறிகள் இருக்குமானால், உங்கள் உறவு விவாகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம் ஆகும்.

விவாகரத்திற்கு அடித்தளம் போடும் அறிகுறிகள் இங்கே!
விவாகரத்திற்கு அடித்தளம் போடும் அறிகுறிகள் இங்கே!

ட்ரெண்டிங் செய்திகள்

இருவருக்கும் இடையே உள்ள எமோஷனலான உணர்வு உடையுமானால், உறவு விவாகரத்தை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் துணைவிக்கும், உங்களுக்கும் இடையே நடக்கும் ஆரோக்கியமான உரையாடல்கள் தோல்விறும் போதும், சமாதன முயற்சிகள் தொடர் தோல்வியை சந்திக்கும் போதும் உறவு விவாகரத்தை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் உறவின் அஸ்திவாரம். இந்த அஸ்திவாரம் ஆட்டம் காணும் போதும், உறவு விவாகரத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

உறவில் ஊக்கப்படுத்துதல் இல்லாமை, எதிர்தரப்பில் உள்ளவரின் பேச்சை கேட்க மறுத்தல், உறவில் திருப்தியின்மை உள்ளிட்டவையும் உறவு விவாகரத்தை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கும்.

இருவருக்கும் இடையேயான உடல் ரீதியான நெருக்கம் குறைபாடு காணும் போதும், விவாகரத்து பத்திரம் வீடு தேடி வர வாய்ப்பு இருக்கிறது.

ஒருவர் இன்னொருவரின் ஆசைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

வருமானம் சார்ந்த விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாத போதும், உறவு விவாகரத்தை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

WhatsApp channel

டாபிக்ஸ்