Tamil News  /  Latest News  /  Tamil Live News Updates January 30 -01-2023

முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் இங்கே

BREAKING: 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் -தமிழக அரசு உத்தரவு

0:39 ISTHT Tamil Desk
0:39 IST

January-30 Tamil News Updates :இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் 

Mon, 30 Jan 202315:21 IST

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Mon, 30 Jan 202314:30 IST

ரோட்டில் நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

அதிமுக வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Mon, 30 Jan 202313:32 IST

தளபதி 67-முக்கிய அறிவிப்பு

மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தளபதி விஜய் சாருடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.

Mon, 30 Jan 202313:31 IST

பட்டியலின இளைஞரை திட்டியவர் கைது

சேலம் திருமலைகிரி மாரியம்மன் கோயிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை திட்டிய மாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Mon, 30 Jan 202312:23 IST

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு-30-க்கும் அதிகமானோர் பலி

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று நிகழ்ந்த நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.

Mon, 30 Jan 202312:14 IST

பத்து தல அப்டேட் நாளை ரிலீஸ்

சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் முதல் பாடலுக்கான அறிவிப்பு, நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

Mon, 30 Jan 202311:55 IST

ட்ரோன்கள் பறக்க தடை

ஜி20 மாநாட்டையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Mon, 30 Jan 202311:54 IST

தடுப்புகள் அமைக்கும் இந்திய ரயில்வே

வந்தே பாரத் ரயில் செல்லும் பாதையில், தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மாடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதி, தொடர்சியாக ரயிலின் முன்பக்கம் சேதமடைந்து வரும் நிலையில், இந்திய ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Mon, 30 Jan 202311:51 IST

சிம்பு படத்தின் முதல் பாடல்-முக்கிய அறிவிப்பு

சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் முதல் பாடலுக்கான அறிவிப்பு, நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Mon, 30 Jan 202310:58 IST

உச்சநீதிமன்த்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மேல்முறையீடு செய்தால் தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று சசிகலா சார்பில் கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Mon, 30 Jan 202310:56 IST

தசரா டீஸர் வெளியீடு

நானி நடிப்பில் உருவாகி வரும் 'தசரா' படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Mon, 30 Jan 202310:21 IST

திமுக ஒன்றிய கழகச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை

திமுக, சேலம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி.மாணிக்கம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Mon, 30 Jan 20239:57 IST

ஓய்வை அறிவித்தார் முரளி விஜய்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியில் விளையாடியவருமான முரளி விஜய் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Mon, 30 Jan 20239:45 IST

பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் கைது

அமைச்சர் பெரியசாமி மற்றும் திண்டுக்கல் துணை மேயர் பற்றி இணையத்தில் தவறாக செய்தி பரப்பிய பாஜக ஐ.டி. அணியை சேர்ந்த நிர்வாகிகள் பொம்முசுப்பு, நாட்ராயன் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

Mon, 30 Jan 20238:52 IST

நிறைவு பெற்றது பாரத் ஜோடோ யாத்திரை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று ஸ்ரீநகரில் நிறைவுக்கு வந்தது. மொத்தம் 116 நாட்களில், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்த 4,80 கி.மீ. தூரம் நடந்துள்ளார் ராகுல்.

Mon, 30 Jan 20238:50 IST

பிலிப்ஸ் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 5% ஆகும்.

Mon, 30 Jan 20238:43 IST

பாஜக கூட்டணி கூட்டம் - ரவீந்திரநாத்துக்கு அழைப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Mon, 30 Jan 20238:36 IST

5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பிப்.,1-ல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மழை - கோப்புபடம்
மழை - கோப்புபடம்

Mon, 30 Jan 20238:13 IST

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம் -  ஜாமீன் மனுவை ஒத்திவைத்த டெல்லி நீதிமன்றம்!

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ராவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை ஜனவரி 31ஆம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Mon, 30 Jan 20237:43 IST

இபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்டேனா-எல்.கே.சுதீஷ் விளக்கம்

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

Mon, 30 Jan 20237:39 IST

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது!

சிவகாசி பராசக்தி காலணியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து 2 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற பெண் விற்பனையாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

Mon, 30 Jan 20237:18 IST

எம்எல்ஏ வானதி சீனிவாசன் பழனிக்கு பாத யாத்திரை

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா தேசிய மகளிர் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தலைமையில் கோவை பாஜகவினர் கோவையில் இருந்து பழனிக்கு பாத யாத்திரை செல்ல உள்ளனர்.

Mon, 30 Jan 20237:14 IST

சீனாவில் கடுமையான நிலநடுக்கம்

சீனா மற்றும் கிர்கிஸ்தானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இது ரிட்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

Mon, 30 Jan 20236:00 IST

சிவகாசியில் ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது!

சிவகாசி பராசக்தி காலணியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து 2 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற பெண் விற்பனையாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் கைது.

Mon, 30 Jan 20234:35 IST

கிளார்க் தேர்வுத்தாள் லீக் விவகாரம்: 15 பேரை கைது ஏடிஎஸ்!

 

பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் காகித கசிவு வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களையும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Mon, 30 Jan 20232:12 IST

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை! 

அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது!

Mon, 30 Jan 20232:04 IST

'வந்தே பாரத்' ரயில்களில் குப்பைகளை அகற்ற மாற்று ஏற்பாடு!

‘வந்தே பாரத்’ ரயில்களில் குப்பையை அகற்றும் பணி, விமானங்களில் உள்ளதை போல மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆகவே பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.

Mon, 30 Jan 20231:51 IST

தீ பற்றி எரிந்த ஆம்னி பேருந்து - 11 பேர் காயம்!

கோவையிலிருந்து பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து சேலம் அருகே தீப்பிடித்து எரிந்தது. இதில் பேருந்தில் இருந்து வேளியேறியபோது 11 பேர் காயமடைந்தனர்.

தீ பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
தீ பற்றி எரிந்த ஆம்னி பேருந்து

Mon, 30 Jan 20231:32 IST

போலீசாரை தரக்குறைவாக பேசிய விசிகவினர் 9 பேர் கைது

தி.மலை: ஆரணியில் போலீசாரை தரக்குறைவாக பேசியதாக கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mon, 30 Jan 20231:32 IST

ஹின்டன் பர்க் ஆய்வறிக்கை - அதானி குழுமம் விளக்கம்

பங்கு சந்தைகளில் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹின் டன்பர்க் ஆய்வறிக்கையின் தெரிவிக்கப்பட்டிருப்பது சுத்த பொய் என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

Mon, 30 Jan 20231:32 IST

அனைத்துக் கட்சிக் கூட்டம் - மத்திய அரசு அழைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் இன்று பகல் 12 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது.

Mon, 30 Jan 20231:31 IST

வங்க கடலில் புயல் சின்னம்: டெல்டாவில் கனமழை எச்சரிக்கை

சென்னை: வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்கு  கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பகிர்வு கட்டுரை