வேதநாயகிக்கு தெரிய வந்த வள்ளியின் காதல் விவகாரம்..இனி நடக்க போவது என்ன? வள்ளியின் வேலன் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வேதநாயகிக்கு தெரிய வந்த வள்ளியின் காதல் விவகாரம்..இனி நடக்க போவது என்ன? வள்ளியின் வேலன் இன்றைய எபிசோட் அப்டேட்

வேதநாயகிக்கு தெரிய வந்த வள்ளியின் காதல் விவகாரம்..இனி நடக்க போவது என்ன? வள்ளியின் வேலன் இன்றைய எபிசோட் அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 28, 2024 04:52 PM IST

லவ் குருவை சரத் ஆட்கள் தூக்கி வேதாநாகிய முன்னர் நிப்பாட்டுகிறார்கள். இதன் மூலம் வள்ளியின் காதல் விவகாரம் வேதநாயகிக்கு தெரிய வந்த நிலையில், அடுத்து நடக்க போவது என்ன என்கிற எதிர்பார்ப்புடன் வள்ளியின் வேலன் இன்றைய எபிசோட் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

வேதநாயகிக்கு தெரிய வந்த வள்ளியின் காதல் விவகாரம்..இனி நடக்க போவது என்ன? வள்ளியின் வேலன் இன்றைய எபிசோட் அப்டேட்
வேதநாயகிக்கு தெரிய வந்த வள்ளியின் காதல் விவகாரம்..இனி நடக்க போவது என்ன? வள்ளியின் வேலன் இன்றைய எபிசோட் அப்டேட்

லவ் குருவை தூக்கும் சரத் ஆட்கள்

லவ் குரு முதலில் நீ காதலிக்கிறவனுக்கு உன் மேலே கேரிங் இருக்கா என்று கண்டு பிடிக்கணும் என சொல்ல, வள்ளி வேலனிடம் சென்று எனக்கு மனசு சரியில்ல வா கோவிலுக்கு போய்ட்டு வரலாம் என்று கூப்பிடுகிறாள்.

வேலன் என்னாச்சு மேடம் என்று அக்கறையாக விசாரிக்க, வள்ளி சந்தோஷமடைகிறாள். அதை தொடர்ந்து வள்ளி வேலனுடன் கோயிலுக்கு கிளம்பி வர, இங்கே சரத் ஆட்கள் லவ் குருவை தூக்கிட்டு வந்து வேதநாயகி முன்னாடி நிறுத்தி வள்ளி இவனை காதலிப்பதாக நிறுத்துகின்றனர்.

லவ் குருவை பார்த்த வேதநாயகி இவனையா என்று கேட்க என்ன இவனையானு கேட்கறீங்க. நான் யார் தெரியுமா என்று பேச, வேதநாயகி பளாரென அறைகிறாள். உடனே லவ் குரு வள்ளி என்னை காதலிக்க என் கிட்ட லவ் சொல்லி பிராக்டிஸ் தான் எடுத்தா என்ற விஷயத்தை சொல்லி அழுகிறான்.

அதன் பிறகு வள்ளி, வேலனுடன் கோயிலுக்கு வந்து பிராகாரத்தை சுத்தும் போது கால் சுளுக்கி கொண்டது போல் நடிக்க, வேலன் அவளை தூக்கி கொண்டு சுற்றுகிறான். வேலனுக்கு தன் மீது அதிக அக்கறை இருப்பதாக வள்ளி புரிந்து கொள்கிறாள்.

காதலை சொல்ல தயாராகும் வள்ளி

அடுத்து வள்ளி காதலை சொல்ல தயாராகி எப்படி சொல்றதுன்னு தெரியல என்று சொல்ல வேலன் பலூன் விற்பதை பார்த்து பலூன் தானே கேட்க போறீங்க என்று சொல்லி பலூனை வாங்கி வந்து கொடுக்கிறான். அதை தொடர்ந்து வள்ளி மீண்டும் காதலை சொல்ல வர, ரத்தினவேல் ஆபிசில் இருந்து போன் வருகிறது. உடனே போனை எடுத்த வேலன் பேசுவதற்காக தள்ளி செல்கிறான்.

அதற்குள் வள்ளி ஒரு முறை லவ் சொல்லி பிராக்டிஸ் செய்து விடலாம் என்று சுவற்றை பார்த்து வேலா ஐ லவ் யூ என்று சொல்கிறாள். அவள் பின்னாடி இருந்து வேதநாயகி இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். ரத்தினவேல் இவனுக்கு வீட்டில் இடம் கொடுத்தா, நீ அவனுக்கு உன் மனசுல இடம் கொடுக்கிறியா என மனதுக்குள் பேசி கொள்கிறாள்.

பிறகு வேதநாயகி வள்ளிக்கு தெரியாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.