Sidhu Shreya: ஆரம்பமாகும் வள்ளியின் வேலன் சீரியல்.. திருவண்ணாமலை கோயிலில் சித்து, ஸ்ரேயா
Sidhu Shreya: மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைய வேண்டும் என்று சித்து மற்றும் ஷ்ரேயா இருவரும் ஜோடியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு ஷ்ரேயா ரஜினி என்ற சீரியலில் நடிக்க சித்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார். இந்த இரண்டு சீரியல்களும் முடிவுக்கு வந்து விட்டதை தொடர்ந்து தற்போதும் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.
ஆமாம், ஜீ தமிழில் வரும் திங்கள் ( செப்டம்பர் 2 ) தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள வள்ளியின் வேலன் என்ற தொடரில் ஜோடி சேர உள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திருவண்ணாமலை கோயிலில் சித்து, ஸ்ரேயா
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7: 30 மணிக்கு இந்த மெகா தொடர் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைய வேண்டும் என்று சித்து மற்றும் ஷ்ரேயா இருவரும் ஜோடியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர், இதனை பார்த்த ரசிகர்கள் வள்ளியின் வேலன் கண்டிப்பாக வெற்றி பெறும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ஆசை இருக்கும் அல்லவா
முன்னதாக சித்து கொடுத்த பேட்டியில், “ குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தை எப்போது என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். எங்களுக்கு தெரிந்த ஒரு அம்மா ஒருவர் இருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் சூர்யா ஜோதிகா குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள், ரன்பீர் கபூர் குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை எங்களுக்கு அனுப்பி வைத்து என்னை இருந்தாலும் ஆசை இருக்கும் அல்லவா என்று கேட்பார்.
எங்களது வீட்டிலேயே நாங்கள் இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்து விடும் என்றுவிட்டுவிட்டார்கள். இப்போது நாங்கள் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறோம். ” என்றனர்.
ஸ்ரேயா பேசும் போது, “அண்மையில் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தேன்.இதனையடுத்து அனைவரும் குழந்தை எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாவற்றிற்கும் நேரம் என்ற ஒன்று வரும்.
கோபம் வரும்
மாதவிடாய் காலங்களில் நமக்கு எதற்கு கோபம் வரும் என்றே தெரியாது. நம்முடைய மூடானது மாறி கொண்டே இருக்கும். என்னுடைய வீட்டில் கூட யாரும் அதை பெரிதாக புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் என்னை இவர் அந்த சமயத்தில் அழகாக புரிந்து கொள்வார். ” என்றார்
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்