SHANTHANATHAR: சோழன் எழுப்பிய சாந்தநாதர் கோயில்.. கல்வியில் முன்னேற்றம் தரும் வேதநாயகி.. ருத்ராட்ச பந்தலில் நந்தீஸ்வரர்-here you can know about the history of arulmigu shanthanathar temple in pudukkottai district - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shanthanathar: சோழன் எழுப்பிய சாந்தநாதர் கோயில்.. கல்வியில் முன்னேற்றம் தரும் வேதநாயகி.. ருத்ராட்ச பந்தலில் நந்தீஸ்வரர்

SHANTHANATHAR: சோழன் எழுப்பிய சாந்தநாதர் கோயில்.. கல்வியில் முன்னேற்றம் தரும் வேதநாயகி.. ருத்ராட்ச பந்தலில் நந்தீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 23, 2024 05:30 AM IST

SHANTHANATHAR: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் புதுக்கோட்டை மாவட்டம் அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில். இந்த திருக்கோவிலூரில் மூச்சு இருக்கக் கூடிய சிவபெருமான் சாந்தநாதர் எனவும் தாயார் வேதநாயகி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

SHANTHANATHAR: சோழன் எழுப்பிய சாந்தநாதர் கோயில்.. கல்வியில் முன்னேற்றம் தரும் வேதநாயகி.. ருத்ராட்ச பந்தலில் நந்தீஸ்வரர்
SHANTHANATHAR: சோழன் எழுப்பிய சாந்தநாதர் கோயில்.. கல்வியில் முன்னேற்றம் தரும் வேதநாயகி.. ருத்ராட்ச பந்தலில் நந்தீஸ்வரர்

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை புதிதாக கட்டியது போல் காட்சி அளிக்கும் எத்தனையோ பிரமாண்ட கோயில்களை நாம் கண்டதில்லை. உயிரினங்கள் தோன்றிய காலத்தில் இருந்து சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது அது என்ன உயிரினங்கள் தோன்றிய காலத்தில் இருந்து மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உயிரினங்கள் தோன்றப்பட்டு விட்டன அந்த உயிரினங்களுக்கும் கடவுளாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது அந்த உயிரினங்கள் நேரடியாக சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாட்டையே கட்டி ஆண்ட மன்னர்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே எத்தனையோ பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றனர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை இந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன.

வானத்தைத் தொடும் அளவிற்கு அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன கலை நேரத்தோடு தங்களது பக்தியை வெளிப்படுத்தி அந்த கோயில்களை மன்னர்கள் கட்டிச் சென்றுள்ளனர். ஓட்டு போட்டுக்கொண்டு சிவபெருமானுக்கு கோயில்கள் கட்டிய அத்தனை மன்னர்களுக்கும் சிவபெருமான் குலதெய்வமாக விளங்கி வந்துள்ளார்.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் புதுக்கோட்டை மாவட்டம் அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில். இந்த திருக்கோவிலூரில் மூச்சு இருக்கக் கூடிய சிவபெருமான் சாந்தநாதர் எனவும் தாயார் வேதநாயகி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த கோயிலின் குளப்பகுதியில் தென்கரை ஓரத்தில் ஆஞ்சநேயர் சன்னதி காணப்படுகிறது இதில் பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு ஆஞ்சநேயர்கள் காட்சி கொடுத்தவர்கள் ஆஞ்சநேயருக்கு 12 சனிக்கிழமை துளசி மாலை அணிவித்து வழிபட்டால் நம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

இந்த சாந்தநாதர் திருக்கோயில் முதலாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய சிவன் கோயிலாக திகழ்ந்து வருகிறது. இது முதலில் குலோத்துங்க சோழீஸ்வரம் என அழைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இந்த திருக்கோயில் சார்ந்தாரை காத்தநாயனார் கோயில் என மாற்றப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இந்த திருக்கோயில் சாந்தநாதர் சுவாமி திருக்கோயில் என அழைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கி இந்த திருக்கோயில் காட்சி கொடுத்து வருகிறது. எங்க வீட்ல இருக்கக்கூடிய சாந்தநாதர் சிவபெருமானை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நீங்காமல் நிலைத்து நிற்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்த வருகிறது. அதுவே ஐதீகம் ஆகும். இந்த கோயிலில் இருக்கக்கூடிய சுவாமிக்கு எதிரே ருத்திராட்சப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அதன் கீழ் நந்தீஸ்வரர் காட்சி கொடுத்து வருகிறார்.

நான்கு வேதங்களுக்கும் தலைவியாக இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய வேதநாயகி அம்மன் விளங்கி வருகிறார். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய தாயாரை வழிபட்டால் கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக விளங்கி வருகிறது. வேதநாயகி அம்மனுக்கு வியாழக்கிழமை மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்