'ஈடில்லை இணையில்லை என்று புகழாத வாயில்லை' மாட்டுக்கார வேலன் செய்த சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'ஈடில்லை இணையில்லை என்று புகழாத வாயில்லை' மாட்டுக்கார வேலன் செய்த சம்பவம்!

'ஈடில்லை இணையில்லை என்று புகழாத வாயில்லை' மாட்டுக்கார வேலன் செய்த சம்பவம்!

HT Tamil Desk HT Tamil
Feb 16, 2023 02:32 PM IST

Maattukara Velan: என் அண்ணன்" மே 21ல் வராவிட்டால் நெல்லையிலும் வெள்ளி விழா கண்டிருக்கும். நெல்லையில் 140 நாட்கள் ஓடி "எங்க வீட்டுப் பிள்ளை" வசூலையும் தாண்டி வெற்றி பெற்றது. 140 நாட்களில் ரூ 181243.66 வசூலாக பெற்று "எங்க வீட்டுப் பிள்ளை"யை காட்டிலும் ரூ20000 அதிகம் பெற்று சாதனை செய்தது.

மாட்டுக்கார வேலன் போஸ்டர் மற்றும் படப்பிடிப்பு காட்சி  -கோப்புபடம்
மாட்டுக்கார வேலன் போஸ்டர் மற்றும் படப்பிடிப்பு காட்சி -கோப்புபடம் (vellore MGR Raamamoorthy)

நகைச்சுவை வசனத்தை மக்கள் திலகம் அப்பாவியாக பேசும் போது தியேட்டரில் எழுந்த ஆரவாரம் அடங்க நெடுநேரம் ஆகியது.

பாடல்கள் அதிலும் 'சத்தியம் நீயே தர்மத்தாயே' என்ற டைட்டில் பாடலில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இசை கேவி.மகாதேவன். அத்தனை பாடல்களும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கும். மிகவும் எளிமையாக வைகை அணையில் படமாக்கப் பட்டிருக்கும். 'பூ வைத்த

பூவைக்கு' பாடலுக்கு இரண்டு ஜோடிகள் ஆடுவது கனவுலகுக்கு சென்று வந்தது போலிருந்தது. அதிலும் 'தொட்டுக்கொள்ள வா' பாடல் வைகை அணையின் அழகை இரவில் பார்க்க மிகவும் அருமை.

சண்டை காட்சிகள் புதுமையாக படமாக்கப்பட்டிருக்கும். அதிலும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் வாத்தியார் கம்பியை தூக்கி சுத்த ஆரம்பிக்கும் போது எழுந்த ஆரவாரம் அடங்க நெடுநேரம் ஆனது. அடுத்து வந்த படங்களிலும் ரசிகர்கள் அதுபோல் ஒரு சண்டைக்காட்சி அமையுமா என்று ஏங்கினார்கள்.

மாட்டுக்கார வேலன் 100வது நாள் போஸ்டர்  -கோப்புபடம்
மாட்டுக்கார வேலன் 100வது நாள் போஸ்டர் -கோப்புபடம்

சூரனை வெல்ல பிறந்த வேலனின் அசுரவெற்றியைப் போல சினிமா உலகே வியந்து வசூல் சக்கரவர்த்திக்கு ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டனர்.

'ஈடில்லை இணையில்லை என்று புகழாத வாயில்லை' என்ற விளம்பரம் "மாட்டுக்கார வேலனு"க்காக பத்திரிகைகளில் பயன் படுத்தப் பட்ட வாசகம். அது உண்மையும் கூட. வெற்றி பெரும் என்று நினைத்த படம் அசுர வெற்றி பெற்று ஓடியது. வேலனுடன் கூட வந்த "எங்க மாமா"வை 'எங்கே மாமா' என்று தேடினாலும் மாமா யார் கண்ணிலும் படாமல் தியேட்டரில் இருந்து விடைபெற்று விநியோகஸ்தர்கள் பெட்டியில் செல்லப்பிள்ளையாக அமர்ந்து கொண்டார். கரைபுரண்டோடிய காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாகி விட்டார் "மாமா".

அடுத்து வந்த "என் அண்ணன்" மே 21ல் வராவிட்டால் நெல்லையிலும் வெள்ளி விழா கண்டிருக்கும். நெல்லையில் 140 நாட்கள் ஓடி "எங்க வீட்டுப் பிள்ளை" வசூலையும் தாண்டி வெற்றி பெற்றது. 140 நாட்களில் ரூ 181243.66 வசூலாக பெற்று "எங்க வீட்டுப் பிள்ளை"யை காட்டிலும் ரூ20000 அதிகம் பெற்று சாதனை செய்தது. சென்னை, மதுரையில் வெள்ளி விழா கொண்டாடியது.. மதுரையில் "அடிமைப்பெண்ணு"க்கு நிகரான வசூலை பெற்றது.

ஒரு சாதாரணமாக 3 மாதத்தில் எடுக்கப்பட்ட படம் 6 மாதத்திற்கு திரையில் மிகுந்த வசூலுடன் ஓடியது மிகப் பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.

12 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இலங்கையிலும் சில திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது. 7 திரையரங்குகளில் 125 நாட்களை தாண்டியும், 4 திரையரங்கில் 150

நாட்களை தாண்டியும் ஓடி சாதனை படைத்தது. சென்னை மற்றும் மதுரையில் வெள்ளி விழா கண்டது. மதுரை சிந்தாமணியில் 177 நாட்களில் ரூ433744.54 வசூல் செய்தது.

சென்னையில் 4 திரையரங்கிலும் தொடந்து 400 காட்சிகளுக்கும் மேலாக அரங்கம் நிறைந்து சாதனை செய்தது. பிளாசாவில் தொடர்ந்து 116 காட்சிகளும், பிராட்வேயில் தொடர்ந்து 136 காட்சிகளும், கிருஷ்ணவேணி யில் தொடர்ந்து 101 காட்சிகளும், சயானியில் தொடர்ந்து 103 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை செய்தது. சென்னையில் சாதாரண அரங்குகளில் 50 நாட்களில் ரூ 7 லட்சத்தை தாண்டி. வசூல் செய்து அசுர சாதனை செய்தது.

சென்னையில் மட்டும் "மாட்டுக்கார வேலன்" மொத்தம் 500 நாட்கள் ஓடி ரூ1321376.11 வசூலாக பெற்றது. மிகவும் சிறிய திரையரங்குகளில் வெளியாகி "அடிமைப்பெண்" "எங்க வீட்டுப் பிள்ளை"க்கு நிகரான வசூலை பெற்று சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போன மாமாவின் மனம் சாந்தி, சாந்தி யென்று ஓய்வு பெறாமல் வடக்கயிறை தேடி அலை பாய்ந்தது.

(K Sankar முகநூல் பதிவு)

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.