சாமுண்டீஸ்வரியை குத்த வந்த சிவனாண்டி..ரூமுக்குள் அடைக்கப்பட்ட கார்த்திக்! நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சாமுண்டீஸ்வரியை குத்த வந்த சிவனாண்டி..ரூமுக்குள் அடைக்கப்பட்ட கார்த்திக்! நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

சாமுண்டீஸ்வரியை குத்த வந்த சிவனாண்டி..ரூமுக்குள் அடைக்கப்பட்ட கார்த்திக்! நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 28, 2024 03:55 PM IST

சாமுண்டீஸ்வரியை சுற்றி வளைத்து சிவனாண்டி ஆட்கள் அவளை குத்த வருகிறார்கள். சாமுண்டீஸ்வரி கிளம்புவதற்கு முன்னர் ரூமுக்குள் அடைக்கப்படுகிறார் கார்த்திக். இப்படியான பரபரப்பான சூழலில் நடந்தது என்ன? என்பதை கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் காணலாம்.

சாமுண்டீஸ்வரியை குத்த வந்த சிவனாண்டி..ரூமுக்குள் அடைக்கப்பட்ட கார்த்திக்! நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
சாமுண்டீஸ்வரியை குத்த வந்த சிவனாண்டி..ரூமுக்குள் அடைக்கப்பட்ட கார்த்திக்! நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

சாமுண்டீஸ்வரிக்கு நிகழப்போகும் ஆபத்து

ஸ்வேதா சாமுண்டீஸ்வரியை யாரோ வெட்ட வருவது போல் கனவு காண்கிறாள். இதன் பின்னர் பயந்து போய் சாமுண்டேஸ்வரியிடம் விஷயத்தை சொல்ல அவள் அதெல்லாம் ஒன்னும் ஆகாது, சூளைக்கு தானே போறேன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறாள். அதன் பின் வீட்டில் இருந்து கிளம்பி ட்ரைவர் எங்கே என்று கேட்கிறாள்.

இந்த சமயத்தில் சந்திரகலா, கார்த்தியை ரூமுக்குள் வைத்து வெளியில் தாழ் போட்டு விட ட்ரைவரை தேடிய சாமுண்டேஸ்வரி, பிறகு தனியாக கிளம்பி வருகிறாள். அடுத்து கார்த்தி இருக்கும் ரூம் கதவை திறந்து விட அவன் யார் ரூமை லாக் பண்ணது, அம்மா கூப்பிட்டாங்க எங்கே அவங்க என்று கேட்க சூளைக்கு சென்று விட்டதாக சொல்கிறார்கள்.

அடுத்து கார்த்திக், ராஜராஜனை பார்க்க வருகிறான். அப்போது தனது துப்பாக்கிக்கு பாலிஸ் போட்டு கொண்டிருக்க கார்த்திக் என்ன மாமா சாமுண்டேஸ்வரி அத்தை இதை கொண்டு போகலையா என்று கேட்கிறான். சூளைக்கு தானே போய் இருக்கா. அங்க நம்ம ஆளுங்க தான் இருப்பாங்க. அதனால் துப்பாக்கி தேவையில்லை என்று சொல்கிறார்.

சுற்றி வளைக்கும் சிவனாண்டி ஆட்கள்

கார்த்திக், ராஜராஜனை மாமா என்று கூப்பிட்டதை பார்த்த சந்திரகலா என்ன மாமானு கூப்பிடுறியே என்று கேட்க எனக்கு இங்கிலிஷ் தெரியாது, அதனால் அப்படி கூப்பிட்டதாக சமாளிக்கிறான். மறுபக்கம் சாமுண்டேஸ்வரி சூளைக்கு வர சிவனாண்டி ஆட்கள் அவளை சுற்றி வளைக்கின்றனர்.

சிவனாண்டி முதுகில் குத்த வர சாமுண்டீஸ்வரி சுதாரித்து அவனிடம் சண்டை போட்டு பிடித்து தள்ளி விடுகிறாள். இருந்தாலும் ரவுடிகள் சாமுண்டீஸ்வரியை லாக் செய்து விட, சிவனாண்டி குத்த வர கார்த்திக் என்ட்ரி கொடுத்து சிவனாண்டியையும் அவனது ஆட்களையும் அடித்து ஓட விடுகிறான்.

ஷாக் ஆகும் கார்த்திக்

சாமுண்டீஸ்வரி, சிவனாண்டியை பார்த்து உங்க அப்பா என் கையால் தான் செத்தான். உனக்கும் என் கையால் தான் சாவு என்று சொல்கிறார். கார்த்திக் இதை கேட்டு ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம் புதிய சீசன்

தீபாவின் மறைவுடன், கார்த்திகை தீபம் முதல் சீசன் இந்த மாதத்தின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து புதிய கதைக்களத்துடன் இந்த தொடரின் புதிய சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க கிராமத்து பின்னணியில் கொண்ட கதைகளத்தை கொண்டதாக உள்ளது.

ஜீ தமிழ் சேனலில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் மற்றொரு சீரியலாக வள்ளியின் வேலன் இருந்து வருகிறது. இந்த தொடர் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.