லண்டனுக்கு வழி சொன்ன கார்த்தி.. துப்பாக்கியுடன் காத்திருந்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபம் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன உள்ளிட்ட விபரங்களை பார்க்கலாம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் சாமுண்டீஸ்வரி டிரைவராக கார் ஓட்ட வேண்டிய சூழ்நிலை உருவான நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
டிரைவராக கார்த்திக்
அதாவது, கார்த்திக் டிரைவராக கார் ஓட்டிச் செல்ல, சாமுண்டீஸ்வரி திருவிழா நடக்கும் இடத்தில் ஏற்பாடு செய்துள்ள பூஜைக்கு செல்கிறாள். இந்த சமயத்தில் கார்த்தியின் சகோதரர்களான அருண், ஆனந்த் அங்கு வந்து நீ உடனடியா ஒரு ஜூம் மீட்டிங் அட்டென்ட் பண்ணனும் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி தூரத்தில் இருந்து இதை பார்த்து என்ன விஷயம் என்னாச்சு? யார் இவர்கள் என கேட்கிறாள்.
லண்டனுக்கு எப்படி?
உடனே கார்த்திக் லண்டனுக்கு எப்படி போவது என வழி கேட்டு வந்திருப்பதாக பொய் சொல்லி சமாளிக்கிறான். அதை பிறகு அண்ணங்களிடம் எதுவும் தெரியாதது போல.. நீங்க போங்க... நான் வந்துறேன் என்று சொல்லி, அனுப்பி வைத்துவிட்டு, காரை லாக் செய்து கார்த்திக் கோயில் அருகே சென்று கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு zoom மீட்டிங் அட்டென்ட் செய்கிறான்.
மற்றொரு பக்கம் பூஜையை முடித்த சாமுண்டீஸ்வரி கார் அருகே வர, அங்கு கார்த்தி இல்லாத நிலையில் அவனைத் தேடி நடந்து வருகிறாள். காருக்குள் மீட்டிங் அட்டென்ட் செய்து கொண்டிருக்கும் கார்த்தியை பார்த்து விடுவாளா என்ற பில்டப் காட்சிகள் எகிற, சாமுண்டீஸ்வரி நெருங்கி வரும் சமயத்தில் கார்த்திக் மறைந்து கொள்கிறான்.
பிறகு கார்த்திக் மீண்டும் கார் அருகே வந்துவிட துப்பாக்கி உடன் காத்திருக்கும் சாமுண்டீஸ்வரி உண்மையை சொல்லு எங்க போன என்று கேட்க, கார்த்திக் போட்டோ ஒன்றை காட்டி இதுதான் ராஜசேதுபதியின் பேரன் என்று சொல்கிறான். இந்த தகவலை கொண்டு வரத்தான் போயிருந்தியா என்ன கார்த்தியை மன்னித்து விடுகிறாள் சாமுண்டீஸ்வரி.
பிறகு வீட்டுக்கு வந்த அவள் ராஜசேதுபதியின் பேரன் இந்த ஊருக்குள்ள நுழையவே முடியாது அவனை எங்க பாத்தாலும் போட்டு தள்ளுங்க என தனது அடியாட்களுக்கு ஆர்டர் போடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை தனக்கு கீழே மரியாதை குறைவாக நடத்த திட்டமிட்டாள்; அதன் படி கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவனை வீட்டுக்குள் அழைத்தாள்; அங்கே சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரா கலா என இருவர் மட்டும் அமர்ந்திருக்க, கார்த்திக்கு உட்கார சார் கூட இல்லாமல் இருந்தது
இந்த சமயத்தில் ஒரு பெண்மணி டீ கொண்டு வந்து கொடுக்க கார்த்திக் அதை தட்டி விட, அது சந்திர கலா மீது கொட்டி விட்டது. இதனையடுத்து அவன் மன்னிப்பு கேட்டான். சந்திரகலா தனது துணியை அலம்பி கொண்டு வருவதற்காக உள்ளே செல்ல கார்த்தி அந்தச் சேரில்.உட்கார்ந்து சாமுண்டீஸ்வரியை ஷாக்காக்குகிறான்.
இதைத்தொடர்ந்து அபிராமி கார்த்திக்கு போன் செய்து எல்லாம் நல்லபடியா நடக்குதா என விசாரிக்க, கார்த்திக்கும் எல்லாம் சரியா போய்ட்டு இருக்கு என சொல்லி போனை வைத்தான். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் வெளியே கிளம்ப கார்த்தி தான் கார் ஓட்ட வேண்டும் என கூறினர்.
அதோடு நிற்கவில்லை.. கார் ஓட்டுவது மட்டுமின்றி சாமுண்டீஸ்வரி வெளியே இறங்கும்போது கதவைத் திறந்து விட வேண்டும்; உள்ளே ஏறும் போது கதவை திறந்து விட வேண்டும் இந்த விதிமுறைகள் எல்லாம் பின்பற்ற வேண்டும் என கண்டிஷன் போட்டனர்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்