அந்த பழக்கம்.. பிரச்னைக்குரிய நடிகர்.. நிஜவாழ்விலும் நடிகர் தான் கார்த்திக்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல்
அந்த பழக்கம்.. பிரச்னைக்குரிய நடிகர்.. நிஜவாழ்விலும் நடிகர் தான் கார்த்திக்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த பழக்கம்.. பிரச்னைக்குரிய நடிகர்.. நிஜவாழ்விலும் நடிகர் தான் கார்த்திக் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறுகையில், ‘’எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருக்கும்போது என்னுடைய கலை வாரிசு பாக்யராஜ் அப்படின்னு தான் சொன்னார்.
பாக்யராஜ் கட்சி ஆரம்பிச்சார். இன்றைக்கு பாக்யராஜ் எங்கு இருக்கார். எம்.ஜி.ஆரே சொன்ன பிறகு, பாக்யராஜ் கலைவாரிசு ஆகிட்டாரா. அவ்வளவு பெரிய ஆளுமையான எம்.ஜி.ஆர் சொன்னதே பலிக்கவில்லை. அப்படி இருக்கையில் விஜய் வந்து படத்தில் சிவகார்த்திகேயனிடன் துப்பாக்கியைக் கொடுத்து, நீ பார்த்துக்கோ அப்படி சொன்னால், சிவகார்த்திகேயன் வந்து தளபதி விஜயாக மாறிவிடுவாரா. இல்லை,இளையதளபதியாக ஆகிவிடுவாரான்னு அதெல்லாம் நடக்காது.
சிவகார்த்திகேயன் பெரிய சம்பளம் வாங்கும் நடிகராக வந்திருக்கார்ன்னு சொன்னால், அது வேற விஷயம். ஆனால், அஜித் - சிவகார்த்திகேயன் அளவுக்கு வந்திட்டாரா என்றால் இல்லை. அது நடக்கவும் நடக்காது. சிவகார்த்திகேயனாக இருந்தாலும் மக்கள் ஒத்துக்கணும். மக்கள் ஒத்துக்கிட்டால் அவங்க ஸ்டார்.
பழைய அமரன் படத்தில் நடித்த கார்த்திக் சாரிடம் அனுமதிபெற்று, புதிய அமரன் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டதாகக் கூறுவது என்பது ஏற்புடையது அல்ல. அவரே அந்தப் படத்தில் பணம் வாங்கி நடித்த நடிகர் தான். தயாரிப்பாளர்களுக்குத் தான் எல்லா உரிமையும் உண்டு. கார்த்திக் சார், அந்த படத்தில் ஒரு சம்பளம் வாங்கி நடித்த ஒரு நடிகர்.
அவர் இந்த டைட்டிலை விட்டுக்கொடுத்தார் அப்படி பேசுவது எல்லாம் மோசமான பேச்சு. தயாரிப்பு நிர்வாகத்திடம் போய்கேட்டுட்டு, ஒரு தொகையும் கொடுத்திருப்பாங்க. அதை எழுதிக்கொடுத்திருப்பாங்க.
கூலி டைட்டில் இப்படி தான் தரப்பட்டது:
இப்போது செவன்த் சேனல் நாராயணன் சார் தயாரிப்பில் சரத் குமார் நடித்த படம், கூலி. அந்தப் படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் வந்து கேட்டதும் கொடுத்திருக்கார். அதேமாதிரி தயாரிப்பாளர்கள் தான் படம் சம்பந்தப்பட்ட அனைத்து உரிமைகளையும் வைச்சிருப்பாங்க.
நவரச நாயகன் கார்த்திக் சார் கூட பணியாற்றும்போது, கொஞ்சம் கசப்பான அனுபவங்கள் தான் எங்களுக்கு இருந்தது. சக்கரவர்த்தி படம் நாங்கள் தயாரித்தபோது, ரூ.20 லட்சம் சம்பளம் பேசி, ரூ.5 லட்சம் கொடுத்தாச்சு. அப்படியிருந்து, முதல் நாள் சூட்டிங்கிற்கே நடிகர் கார்த்திக் வரவில்லை.
போய் ஒரு ஹாஸ்பிட்டலில் படுத்துக்கிட்டார். கேட்டால் லூஸ் மோசன்னு சொல்றார். அவர் வேணும்னு போய் ஹாஸ்பிட்டலில் படுத்துக்கிடுவார். பிறகு என்ன செய்வீங்க. சூட்டிங்கிற்கு வரக்கூடாதுன்னு முடிவு செய்துவிட்டால் எல்லா டிராமாவும் போடுவார்.
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் அவர் பெரிய நவரச நாயகன். வரமுடியவில்லை என்றால் பல பல பொய்க்காரணம் சொல்வார். அவர் சூட்டிங்கிற்கு வரவேண்டிய சூழல் வந்தது என்றால், கூட நடிக்கும் நடிகைகளைத் தூண்டிவிடுவார், நீ வந்து வராத என்று. அப்போது காம்பினேஷன் ஹீரோயின் வரலைன்னா, என்ன செய்யமுடியும் தயாரிப்பாளர்.
கேரக்டர் வீக்கான நடிகர் கார்த்திக்:
அதற்குக் காரணம் என்னவென்றால், நடிகர் கார்த்தியின் தனிப்பட்ட கேரக்டர் ரொம்ப வீக் ஆகிடுச்சு. பல பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டார். அதனால் அவரால் வந்து சரியாக நடிச்சுக் கொடுக்கமுடியவில்லை. இப்போது இருக்கிற நடிகர்களில் பல நடிகர்களை ஒப்பிடும்போது, கார்த்திக் இயல்பில் நல்லவர் தான். ஆனால், அவருடைய பெர்ஷனல் குணங்கள் அவரை பாழ் ஆக்கிடுச்சு.
கார்த்திக் சாரை அந்த காலகட்டத்தில் வைத்து தயாரித்து எல்லா தயாரிப்பாளர்களுக்கும் பிரச்னை கொடுத்திட்டு தான் இருந்தார். வெளிப்படையாகவே, பிரச்னைக்குரிய நடிகர் என்று நடிகர் கார்த்திக் சார் பெயர் எடுத்தார்.
இதுவே சங்கிலி முருகன் சார் தயாரிக்கும் படத்தில் அப்படி நவரச நாயகன் பண்ணாததற்குக் காரணம், அவர் முழு சம்பளத்தையும் கொடுத்திருவார். 20 நாட்கள் ஒரு கிராமத்தில் வைச்சு, அவருக்கு வேணும்கிற ஏ.சி. எல்லாம் செட் செய்துகொடுத்து, அவர் கண்காணிப்பிலேயே வைச்சுக்கிடுவார். அதனால் தான், வேறு வழியில்லாமல், கார்த்திக் சார் அதில் நடித்துக்கொடுத்தார்'' என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கிறார்.
நன்றி: ஆகாயம் தமிழ்
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
டாபிக்ஸ்