திருட்டு பழி..தூக்கில் தொங்கிய அம்மா..சாமுண்டீஸ்வரி கதைக்கு பின் கார்த்திக் என்ன செய்கிறார்? கார்த்திகை தீபம் இன்று
நகை திருட்டு பழியால் தூக்கில் தொங்கிய சிவகாமி, சாமுண்டீஸ்வரி கதைக்கு பின் கார்த்திக் என்ன செய்கிறார்? கார்த்திகை தீபம் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம்.

திருட்டு பழி..தூக்கில் தொங்கிய அம்மா..சாமுண்டீஸ்வரி கதைக்கு பின் கார்த்திக் என்ன செய்கிறார்? கார்த்திகை தீபம் இன்று
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம் தனது குடும்பம் குறித்த ஃபிளாஷ்பேக் கதையை சொல்லி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அவமானம் தாங்க முடியாமக் சிவகாமி தற்கொலை
கோயிலில் நகை காணாமல் போன நிலையில், அந்த நகையை தேடும் போது சிவகாமி வீட்டின் வாசலில் ஒரு நகை கிடைக்கிறது. இதனால் ராஜா சேதுபதி, சிவகாமி தான் நகை திருடியதாக தவறாக புரிந்து கொள்கிறார்.
சிவகாமியை பார்த்து உனக்கு வேலை போட்டு கொடுத்து வீட்டில் தங்க வைத்தால் இப்படி பண்ணிட்டியேமா என்று கேட்கிறார். இதனால் அவமானம் தாங்காத சிவகாமி வீட்டுக்குள் ஓடிப்போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
