போலீஸிடமே ஆட்டைய போட்ட ஐஸ்வர்யா..தீபா குறித்து கார்த்திக்கு தெரிய வந்த உண்மை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
போலீஸிடமே ஆட்டைய போட்ட ஐஸ்வர்யா, கார்த்திக்கை சிக்க வைக்க முயற்சிக்கிறாள். இதற்கிடையே தீபா இருக்கும் இடம் குறித்து கார்த்திக்கு உண்மை தெரியவர அவளை தேடி செல்கிறான். கார்த்திக் போலீசிடம் மாட்டிக்கொண்டானா என்ற பரபரப்பை காட்டும் விதமாக கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் குடும்பத்தினர் எல்லாரும் கச்சேரிக்கு கிளம்பிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தீபா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கார்த்திக்
அதாவது, கார்த்திக், கீதா ஆகியோர் காரில் வந்து கொண்டிருக்கும் போது முருகன் வேடத்தில் வந்த சிறுவன் பைக் ரிப்பேராகி நின்று கொண்டிருக்கிறான். கார்த்திக் இதை பார்த்து விட்டு என்னாச்சு என்று கேட்க பைக் ரிப்பேர் ஆகி விட்டதாக சொல்கிறான்.
கார்த்திக் பக்கத்தில் கீதாவும் நிற்க, இதை பார்த்த சிறுவன் பிரச்னை தீர்ந்து விட்டதா என்று கேட்கிறான். இதை பார்த்து கார்த்திக் புரியாமல் நிற்க, இவங்கள மாதிரியே ஒருத்தங்களை ஒரு முறை பார்த்ததாகவும் ஆசிரமத்தில் விட்டதாகவும் சொல்கிறான். உடனே கார்த்திக் அது தீபா தான் என்று புரிந்து கொண்டு எந்த இடம் என்று விசாரிக்க, அந்த சிறுவன் இடம் எதுன்னு தெரியல, ஆனால் எப்படி போகணும்னு தெரியும் வா கூட்டிட்டு போறேன் என்று காரில் ஏறி வழி காட்ட தொடங்குகிறான்.