போதை பார்ட்டி விவகாரத்துக்கு பின் கார் விபத்தால் ஏற்பட்ட சர்ச்சை..போலீசாரால் கைது! நடிகர் ஸ்ரீநாத் பாஸி லைசென்ஸ் ரத்து
போதை பார்ட்டி விவகாரத்துக்கு பின் கார் விபத்து ஏற்படுத்தியதாக சர்ச்சையில் நடிகர் ஸ்ரீநாத் பாஸியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அவரது லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொச்சியில் போதை பொருளுடன் கேங்ஸ்டர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிசாசு பட நடிகை பிரயாகா மார்டின், மஞ்சுமோல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாஸ ஆகியோரின் பெயர் அடிபட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த போலீசார், நடிகை மற்றும் நடிகர் ஆகிய இருவரையும் போலீசார் விசாரணை வளையைத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் ஸ்ரீநாத் பாஸி.
கார் விபத்தை ஏற்படுத்தியதாக கைது
கடந்த சில நாள்களுக்கு முன் எர்ணாகுளம் மட்டாஞ்சேரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்துகொண்டிருந்த, முகமது பஹீம் என்பவர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதற்கிடையே விபத்தில் முகமது பஹீமுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து எர்ணாகுளம் மத்திய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கில் நடிகர் ஸ்ரீநாத் பாஸி கைது செய்யப்பட்டார். பின்பு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.