தூண்டிவிட்ட கார்த்திக்; சைடு கேப்பில் சிந்து பாடிய பானுப்பிரியா.. தூது போன புகார் கடிதம்; வெளுத்து விட்ட தயாரிப்பாளர்!
சக்கரவர்த்தி திரைப்படத்தில் கார்த்திக் தூண்டுதலினால், பானுப்பிரியா செய்த மோசமான செயல் குறித்து பாலாஜி பிரபு பேசி இருக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் பாஸ்கரின் மகனான பாலாஜி பிரபு சக்கரவர்த்தி திரைப்படத்தில் பானுப்பிரியா செய்த மோசமான செயல் குறித்து மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ கார்த்திக் மனிதராக மிகவும் நல்லவர்தான். அனைவரையும் அவர் அன்பாக நடத்துவார். என்னுடைய அப்பாவுக்கும், அவருக்கும் இடையே நல்ல இணக்கம் இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு எவ்வளவு நேரம் லேட்டாக வந்தாலும், காட்சியை மிக விரைவாக நடித்துக்கொடுத்துவிட்டுச் சென்று விடுவார். ஆனால், அவருக்கு இருந்த தவறான பழக்கவழக்கங்கள்தான், அவரது கெரியரை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டது. அதையெல்லாம் இங்கு இப்போது சொல்லி அவரது மனதை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இருப்பினும், நாங்கள் தயாரித்த சக்கரவர்த்தி திரைப்படத்தில் அவரின் தூண்டுதலால், பானுப்பிரியா செய்த மோசமான செயலை இங்கு நான் பகிர்கிறேன்.