Karthigai Deepam: அபிராமி வீட்டுக்கு வந்த துங்கா.. அதிர்ச்சியில் ஆடி போன கீதா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!-zee tamil karthigai deepam serial latest today episode on september 21 and 2024 indicates geetha is shocked by thunga - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: அபிராமி வீட்டுக்கு வந்த துங்கா.. அதிர்ச்சியில் ஆடி போன கீதா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: அபிராமி வீட்டுக்கு வந்த துங்கா.. அதிர்ச்சியில் ஆடி போன கீதா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Marimuthu M HT Tamil
Sep 21, 2024 05:13 PM IST

Karthigai Deepam: அபிராமி வீட்டுக்கு வந்த துங்கா குறித்தும், அதிர்ச்சியில் ஆடி போன கீதா குறித்தும் கார்த்திகை தீபம் சீரியலில் ஒளிபரப்பாகவுள்ளது.

Karthigai Deepam: அபிராமி வீட்டுக்கு வந்த துங்கா.. அதிர்ச்சியில் ஆடி போன கீதா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
Karthigai Deepam: அபிராமி வீட்டுக்கு வந்த துங்கா.. அதிர்ச்சியில் ஆடி போன கீதா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் கார்த்திக் தீபாவை தேடி அலைய, சக்தி கார்த்தியை பார்த்தும் பேச முடியாமல் போன நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, தீபா கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு வந்த கார்த்திக் சோகமாக உட்கார்ந்து இருக்க கீதா அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

மறுபக்கம் சக்தி மயக்கத்தில் இருக்கும் தீபாவிடம் பேச்சு கொடுக்க அப்போது எப்.எம். ரேடியோவில் இருந்து தீபா பற்றிய தகவலை ஒருவர் சொல்ல வருவதாக சொல்ல, சக்தி கிளம்பி செல்கிறாள். சம்பந்தப்பட்ட நபர் வரும் வழியில் துங்காவின் காரில் மோதி விபத்துக்குள்ளாகி செல்லமுடியாத நிலையில் இருக்கிறான். இதனால் சக்தி ஏமாற்றம் அடைகிறாள்.

எஃப்.எம்.ரேடியோவில் தீபா பற்றிய தகவலை அறிந்த துங்கா:

அதே நேரத்தில் அவனுக்கு கார்த்திக் என்பவர், தீபாவின் கணவர் என்பதும், ஒரு ஆடியோ கம்பெனி வைத்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. எஃப்.எம். ரேடியோவில் விஷயத்தைக் கேட்ட துங்கா, சக்திக்கு போன் செய்து தீபாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்ட, சக்தி முடியாது என்று சொல்கிறாள்.

அடுத்து துங்கா எதிர்பாராத விதமாக ஆனந்த்தை சந்திக்க இருவரும் நண்பர்கள் எனத்தெரிய வருகிறது. அதன் பிறகு துங்காவை வீட்டுக்கு அழைத்து வர, அதைப் பார்த்து கீதா அதிர்ச்சி அடைகிறாள். ஆனந்த் குடும்பத்தார் எல்லோரையும் அறிமுகம் செய்து வைக்க, கடைசியாக தீபாவை கூப்பிட, தீபா ரெஸ்ட் ரூமில் இருப்பதாக பொய் சொல்லி தப்பிக்கிறாள்‌.

அடுத்து அபிராமி தீபாவின் தாலியைக் கேட்க, அவளும் உள்ளே சென்று கார்த்திக் கொடுத்த தாலியை எடுத்து வந்து கொடுத்து சமாளிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட் அப்டேட்:

அதாவது, போலீஸ் தீபாவும், கீதாவும் ஒரே உருவத்தில் இருப்பது பெரிய சிக்கல். கூடிய சீக்கிரம் தீபாவை கண்டுபிடிக்கணும். துங்காவும், கீதாவை தீவிரமாக தேடிக்கிட்டு இருப்பதாகச் சொன்னாள். கார்த்திக், கீதா என்னை நம்பி வந்திருக்காங்க, அவங்களையும் காப்பாற்றணும் என்று சொன்னான்.

அதன் பிறகு சக்தி, எஃப்.எம். ரேடியோவிற்கு ஃபோன் போட்டு ஏதாவது தகவல் கிடைத்ததா என்று விசாரிக்க, மேனேஜர் இன்னும் எதுவும் கிடைக்கல. கண்டிப்பா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் என்று சொல்லி போனை வைத்தார். அதன் பிறகு கார்த்திக், போலீஸ் ரெஸ்டாரன்டில் இருந்து கிளம்ப, நர்ஸ் சக்தி அதை பார்த்து விடுகிறாள்.

ஆனால், அவளை கார்த்திக் கவனிக்காமல் கிளம்பி வந்து விடுகிறான். இருப்பினும், திடீரென யாரோ தொடர்ந்து வந்தது போல கார்த்திக் உணர திரும்பி பார்த்தான். ஆனால், அங்கு யாரும் இல்லாததால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள முடியாமல் போகிறது.

மறுபக்கம் அபிராமி வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யா, வீட்டில் இருப்பது தீபாவே கிடையாது; கீதா என்ற உண்மையை போட்டுடைக்க கீதாவும் ஆமாம் என்று ஒப்புக்கொள்கிறாள். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நேரத்தில் கார்த்திக் தீபாவுடன் வீட்டுக்குள் நுழைய தீபாவோ, ஐஸ்வர்யா தான் தன்னை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டது என்ற உண்மையை உடைத்தாள். அதைக்கேட்ட அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர்.

இதைக்கேட்டு தவித்த ஐஸ்வர்யா என்னை கைது பண்ணிடாதீங்க என்று அலறி துடிக்க, அது அவளது கனவு என்று தெரிய வருகிறது. இதனையடுத்து அருண் என்ன ஆச்சு என்ன உளறிட்டு இருக்க என்று கேட்க, அவனை அவள் சமாளிக்கிறாள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.