Vivek Oberoi: சுனாமி பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு உதவிய விவேக் ஓபராய்.. ஐஸ்வர்யா ராயுடனான காதல்-special article on vivek oberois 48th birthday - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vivek Oberoi: சுனாமி பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு உதவிய விவேக் ஓபராய்.. ஐஸ்வர்யா ராயுடனான காதல்

Vivek Oberoi: சுனாமி பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு உதவிய விவேக் ஓபராய்.. ஐஸ்வர்யா ராயுடனான காதல்

Marimuthu M HT Tamil
Sep 03, 2024 08:15 AM IST

Vivek Oberoi: சுனாமி பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு உதவிய விவேக் ஓபராய்.. ஐஸ்வர்யா ராயுடனான காதல் குறித்தும் அவரது பிறந்தநாளான இன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Vivek Oberoi: சுனாமி பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு உதவிய விவேக் ஓபராய்.. ஐஸ்வர்யா ராயுடனான காதல்
Vivek Oberoi: சுனாமி பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு உதவிய விவேக் ஓபராய்.. ஐஸ்வர்யா ராயுடனான காதல் (PTI)

விவேக் ஓபராயுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள பந்தம்:

விவேக் ஓபராய் செப்டம்பர் 3, 1976ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை பஞ்சாபி மொழி பேசும், சுரேஷ் ஓபராய். இவரும் ஓர் நடிகர். தாய் யசோதரா, சென்னையில் பிறந்து வளர்ந்த ஓர் பஞ்சாபி. அதனால்தான் தாயிடமிருந்து தமிழ்மீதும் தமிழர்கள் மீதும் விவேக் ஓபராய் இடையே அன்பு வந்தது.

விவேக் ஓபராயின் கல்வி:

விவேக் ஓபராய் மும்பையில் உள்ள மயோ கல்லூரி, அஜ்மீர் மற்றும் மிதிபாய் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். அதன்பின், லண்டனில் நடிப்பிற்கான பயிற்சிப் பட்டறையில் இருந்த நடிகர் விவேக் ஓபராய், அங்கு நியூயார்க் பல்கலைக்கழகத்தின் இயக்குநரைக் கண்டு நண்பர் ஆனார். அதன்பின், அவர் விவேக் ஓபராயை நியூயார்க்கிற்கு அழைத்துச் சென்று, நடிப்புத்துறையில் முதுகலைப் பட்டம் பெற உதவினார்.

ஐஸ்வர்யா ராயின் காதல்:

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் திருமணம் முடிக்காது இருந்தபோது, சல்மான் கானோடு சில ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்தார். இதற்கிடையே அவரது பிரேக் அப்பிற்கு இடையே விவேக் ஓபராய் சிறிதுகாலம் ஐஸ்வர்யா ராயுடன் டேட்டிங்கில் இருந்துள்ளார், விவேக் ஓபராய் என செய்திகள் வட்டமடித்தன. இது எல்லாம் காலத்தின் சுழற்சியில் மறைந்துபோக, பிரியங்கா அல்வாவை 2010ஆம் மணந்துகொண்டு, இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார், விவேக்

விவேக் ஓபராய் நடித்த முக்கிய படங்கள்:

இந்தியில் 2002ஆம் ஆண்டு, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ’கம்பெனி’ என்னும் படத்தின்மூலம் அறிமுகமானார், விவேக் ஓபராய். 

அதன்பின் இவர் நடித்த Rediff.com என்ற திரைப்படம் மலையாள நடிகர் மோகன்லால், அஜய் தேவ்கன் ஆகியோரால் பாராட்டப்பட்டது. 

2004-ல் மஸ்தி என்னும் நகைச்சுவைப்படத்திலும் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தின் இந்தி வெர்ஷனான ‘யுவா’ படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் கமர்ஷியலாகவும் விமர்சன ரீட்தியாகவும் வெற்றிபெற்றன. 2005ஆம் ஆண்டில் கிஸ்னா.. தி வாரியர் பொயட் என்னும் படத்தின் டைட்டில் கேரக்டரில் நடித்தார்.

அதன்பின், இந்தியில் ’ஓம்காரா’ என்னும் படத்தில் விஷால் பரத்வாஜ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவரின் நடிப்பைப் பார்த்து குல்சார் வாழ்த்து தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு லோகண்ட்வாலா என்னும் படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடித்தார். அதற்காக வில்லனுக்கான ஃபிலிம்பேர் விருதை வென்றார். 2008ஆம் ஆண்டு, மிஷன் இஸ்தான்புல் என்னும் படத்திலும், 2009ஆம் ஆண்டில் கரீனா கபூர், சைஃப் அலிகான் நடித்த குர்பான் படத்தில், ஒரு ஹீரோவாக விவேக் ஓபராய் நடித்தார். இப்படமும் தோல்வியடைந்தது. 

அதன்பின், கிராண்ட் மஸ்தி, கிரிஷ் 3 ஆகிய இந்தி படங்களில் நடித்த விவேக் ஓபராய் தென்னிந்திய சினிமாக்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

தமிழில் வெளியான ரத்த சரித்திரத்தின் இந்தி பதிப்பில் இவர் நடித்திருந்தார். அதேபோல், விவேகம் படத்தில் நடிகர் அஜித்தை எதிர்க்கும் வில்லனாகவும், மலையாளத்தில் பிரிதிவிராஜ் இயக்கத்தில் வெளியான லூஃசிபர் திரைப்படத்தில் மெயின் வில்லனாகவும் பட்டையைக் கிளப்பினார். பின், விநய விதேய ராமா என்னும் தெலுங்கு படத்திலும், கடுவா என்னும் மலையாளப்படத்திலும் விவேக் ஓபராய் நடித்தார்.

அத்தகையவருக்கு இன்று 48ஆவது பிறந்தநாள்.. வாழ்த்துவோம்!

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.