Vettaiyan: படையப்பா மொமண்ட்..ரஜினி கமல் இருவரும் தனி வழி - வேட்டையன் லேடிஸ் துஷாரா, அபிராமி உற்சாக பேச்சு-vettaiyan ladies dushara vijayan and abirami shares excitement about working with rajinikanth - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vettaiyan: படையப்பா மொமண்ட்..ரஜினி கமல் இருவரும் தனி வழி - வேட்டையன் லேடிஸ் துஷாரா, அபிராமி உற்சாக பேச்சு

Vettaiyan: படையப்பா மொமண்ட்..ரஜினி கமல் இருவரும் தனி வழி - வேட்டையன் லேடிஸ் துஷாரா, அபிராமி உற்சாக பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 21, 2024 08:38 PM IST

Vettaiyan Audio Launch: ரஜினியுடன் நடித்து வேட்டையன் விழாவில் பேசுவதை படையப்பா மொமண்டாக பார்க்கிறேன் என துஷாரா விஜயன் பேசியுள்ளார். அதேபோல் நடிகை அபிராமியும் ரஜினி கமல் இருவரும் தனி வழியை கொண்டிருப்பதாக பேசினார்.

Vettaiyan: படையப்பா மொமண்ட்..ரஜினி கமல் இருவரும் தனி வழி - வேட்டையன் லேடிஸ் துஷாரா, அபிராமி உற்சாக பேச்சு
Vettaiyan: படையப்பா மொமண்ட்..ரஜினி கமல் இருவரும் தனி வழி - வேட்டையன் லேடிஸ் துஷாரா, அபிராமி உற்சாக பேச்சு

ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் வேட்டையன் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் ஃபகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா விஜயன்ஸ ரித்திகா சிங் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

படத்தின் இசை வெளியிட்டு நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர்கள் அனைவரும் பங்கேற்றனர். இசை வெளியீட்டு விழாவில் ரெட் கார்பெட் நிகழ்வு நடைபெற்றது. இதில் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த பிரபலங்கள் அனைவரும் நடந்து வந்து போஸ் கொடுத்தனர்.

வேட்டையன் விழாவில் நடிகை துஷாரா விஜயன் பேசியதாவது, "ரஜினியுடன் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன்.

படையப்பா மொமண்ட்

இந்தப் படத்தில் நடிக்கும்போது நிறைய கற்றுக் கொண்டேன். என்னை விட சீனியர் நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுடன் நானும் இந்தப் படத்தில் இருக்கிறேன் என்பது பெருமையாக உள்ளது.

ஜெய் பீம் படத்தை பார்த்து இயக்குநரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். ஆனால் அப்போது தெரியாது தலைவர் படத்தில் நான் நடிப்பேன் என்று. இங்கு நான் பேசுவது என்னுடைய படையப்பா மொமண்ட் ஆக பார்கிறேன்.

இரண்டு விஷயங்களை சாதித்துள்ளேன்

நான் இன்று இரண்டு விஷயங்களை சாதித்ததாக உணர்கிறேன். ஒன்று தலைவர் முன்னிலையில் பேசுவது, மற்றொன்று எனது அப்பா முதன்முறையாக நான் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருப்பது.

வேட்டையன் படத்தில் முதல் நாள் காட்சியே எனக்கு தலைவருடன் இருந்தது. படப்பிடிப்புக்கு இடையில் தலைவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாலே ஸ்டைலா இருக்கும்" என்றார்.

ரஜினி கமல் இருவரும் தனி வழி

விழாவில் நடிகை அபிராமி பேசியதாவது, "கமலுடன் நடிப்பதும், ரஜினியுடன் நடிப்பதும் இரு வேறு அனுபவங்கள்.ரஜினியின் வழி தனி வழி. கமலின் வழி தனி வழி. ரஜினியுடன் இணைந்து வேலை பார்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் அருகில் அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்தது.

பல் கேள்விகளை கேட்டு கேட்டு அவரை தொல்லை செய்து விட்டேன். அவருடைய மூளை எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதில் எனக்கு அவ்வளவு ஆர்வம். படப்பிடிப்பை தாண்டி அவருடன் செலவழித்த நேரங்களை நான் சேகரித்து வைத்திருக்கிறேன்.

வேட்டையன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறப் போகிறது. அனைவரும் படத்தை காணுங்கள்" என்றார்.

கமல், ரஜினியுடன் இணைந்து நடித்த நடிகை

2004இல் வெளியான விருமாண்டி படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்தார் அபிராமி. இதன் பின்னர் திருமணம் செய்து கொண்ட அவர் 2014இல் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

தமிழில் அபிராமி கம்பேக் கொடுத்த படமாக ஜோதிகா நடித்த 36 வயதினிலே படம் இருந்தது. இதையடுத்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து வந்தார்.

இந்த ஆண்டில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜாவில் வில்லனாக வரும் அனுராக் காஷ்யப் மனைவியாக நடித்திருந்தார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இதன்மூலம் கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து நடித்த நடிகையாகியுள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.